தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடர்களுடன் எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தமிழா தமிழா.
இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியைப் போல விவாத மேடை ஆகும்.
இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. முதலில் இந்த நிகழ்ச்சியை இயக்குனர் கரு பழனியப்பன் தொகுத்து வழங்கியிருந்தார். சில சர்ச்சையின் காரணமாக இவர் நிகழ்ச்சியை விட்டு விலகி விட்டார். தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
தமிழா தமிழா நிகழ்ச்சி:
மேலும், இந்த நிகழ்ச்சியை youtube சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் ஜோதிடர்கள் vs மக்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எதிரிச்சல் நடிகர் மாரிமுத்து கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஜோதிடர்களுடன் மாரிமுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜோதிடர்கள் vs மக்கள்:
அதாவது, இந்த நிகழ்ச்சியில் சந்திராஷ்டமம் அன்று செல்பி எடுத்து டெலிட் செய்து விட்டால் அந்த நல்ல நாளாக இருக்கும் என்று ஜோதிடர்கள் சொன்னார்கள். இதை கேட்டவுடன் மாரிமுத்துவுக்கு கோபம் வந்தது. ஆனால், அவர் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். பின் மாறி மாறி ஜோதிடர்கள் பேசிக் கொண்டிருந்ததை ஆத்திரம் தாங்க முடியாத மாரிமுத்து கொரோனா வரும்போதும், சென்னையில் வெள்ளம் வரும்போதும் எந்த ஜோதிடமும் எதுவுமே சொல்லவில்லை.
கோபத்தில் மாரிமுத்து:
அதோடு ஸ்டாலின் முதல்வராகவே வாய்ப்பு இல்லை என்று சொன்னார்கள். ஆனால், இன்று அவர் முதல்வராகிவிட்டார். இதையெல்லாம் ஏன் நீங்கள் சொல்லவில்லை? அதை விட்டு தேவையில்லாததெல்லாம் சொல்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். இதை அடுத்து ஜோதிடர்களுக்கும், மாரிமுத்துவுக்கும் இடையே வாக்குவாதம் கிளம்பி இருக்கிறது. தற்போது இது தொடர்பான புரோமோ தான் வெளியாகியிருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சியின் எபிசோடுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
மாரிமுத்து குறித்த தகவல்:
சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சீரியலில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் மாரிமுத்து. இவர் இந்த சீரியலுக்கு முன்பு இயக்குனராகமும், சினிமாவில் படங்களிலும் நடித்து வருகிறார். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது எதிர்நீச்சல் சீரியல் தான். தற்போது இவர் ஜெயிலர், இந்தியன் 2 படங்களில் நடித்திருக்கிறார்.