பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் யார் யார் ? சேனல் தரப்பு அனுகியதாக கூறப்படும் நபர்களின் புகைப்படம் இதோ

0
1700
BiggBoss7
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை முதன் முதலில் இந்தியில் தான் அறிமுகப்படுத்தியிருந்தார்கள். இதை தொடர்ந்து பிற மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது.

-விளம்பரம்-

முதல் சீசனை தொடர்ந்து தற்போது ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் நடைபெறுகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் புதுப்புது வித்தியாசமான டாஸ்க்களை கொடுத்து மக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் பட்டத்தை வெல்லும் வெற்றியாளர்களுக்கு பரிசு தொகையாக 50 லட்சமும் கொடுக்கிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி:

மேலும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி இருந்தது. இந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் தான் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் அசிம் டைட்டில் வின்னரானார். விக்ரமன் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி:

பாஸ் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த முறை நிகழ்ச்சியில் யார்? கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவல் ஏற்பட்டிருக்கிறது. இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு காமெடி நடிகர் சரத், பாவனா, மாகாபா, உமாரியாஸ் ஆகியோர் ஆடிஷனில் கலந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

ஜாக்குலின்:

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் இவர் சீரியலில் நடித்திருந்தார். அதன் பிறகு இவர் கோலமாவு கோகிலா உட்பட சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதற்குப்பின் இவருக்கு பெரிதாக டிவிலும், சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மீண்டும் வாய்ப்புகள் கிடைக்கத் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

பிரித்திவிராஜ்:

இவர் தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர். சிறு வயதில் இருந்த இவர் படங்கள், சீரியல்களில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சிறந்த டான்ஸரும் ஆவார். விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டிருந்தார். சமீபத்தில் இவருடைய திருமணம் தான் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையாகவே இருந்தது. இவர் நிகழ்ச்சிக்கு வந்தால் கண்டன்ட் கிடைக்கும் என்கிறார்கள்.

தினேஷ்:

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தினேஷ். இவர் நடிகை ரக்ஷிதாவின் கணவர். தற்போது இவர் கிழக்கு வாசல் சீரியலில் நடிக்கிறார். கடந்த சீசனில் தான் இவருடைய மனைவி ரட்சிதா போட்டியாளராக பங்கு பெற்றிருந்தார். அப்போது இவர் நிகழ்ச்சிக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

ரேகா நேயர்:

இவரும் விஜய் டிவி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இருந்தாலும் இவருக்கு பெரிய அளவு ரீச் கிடைத்தது பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தின் மூலம் தான். இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் சூடு பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

ஷர்மிளா:

தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆன நபராக இருப்பவர் கோவை பெண் டிரைவர் ஷர்மிளா தான். இவர் இயக்கிய பேருந்தில் கனிமொழி பயணித்த பிறகு சர்ச்சையின் காரணமாக இவருக்கு வேலை சென்று விட்டது. அதற்கு பிறகு கமலஹாசனும் இவருக்கு உதவி செய்திருக்கிறார். ஏற்கனவே நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு மூலம் பிரபலமான ஜூலி வந்ததை போல் மக்களில் பொது நபர்களில் ஒருவராக சர்மிளாவும் பிக் பாஸிற்கு வர வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்ரீதர்:

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடன இயக்குனராக இருப்பவர் ஸ்ரீதர். இவரை என்டர்டைன்மென்ட் கேட்டகிரியில் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பார் என்று கூறப்படுகிறது. சாண்டி, ராபர்ட் மாஸ்டரை தொடர்ந்து இந்த சீசனில் ஸ்ரீதர் மாஸ்டர் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement