ஜனனிக்கு கிடைத்த புதிய பந்தம், இனி கம்பெனி யாருக்கு? ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்டில் எதிர் நீச்சல்

0
251
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் என்றால் அது எதிர்நீச்சல் தான். வாரம் வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் தான் உச்சத்தில் இருக்கும். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். சில மாதங்களாகவே சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம், வீட்டு பெண்கள் எல்லோரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்கள். இதை அறிந்து குணசேகரன் கோபப்படுகிறார். பின் இவர்களுக்கு உறுதுணையாக இருந்த அப்பத்தா இறந்து விடுவதைப் போல காண்பிக்கிறார்கள். இன்னொரு பக்கம், ஜீவானந்தத்தை போலீஸ் கைது செய்து விடுகிறார்கள்.

குணசேகரன்- ஈஸ்வரி தேர்தல்:

பின் சேர்மன் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் குணசேகரன்- ஈஸ்வரி இருவரும் எதிர் எதிரே நிற்கிறார்கள். மேலும், கடந்த வாரம் எபிசோட்டில் கிருஷ்ணன் மெய்யப்பன் மற்றும் அவருடைய அண்ணன் ராமசாமி மையப்பன் குணசேகரன் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது குணசேகரன் ஒவ்வொருவராய் அறிமுகம் செய்து கொண்டிருக்கும் போது ஜனனி என்னுடைய எதிரி என்று ராமசாமி கூறுகிறார். பின் அவர் தன்னுடைய வீட்டில் இருந்த நபர் முதுகில் குத்தி விட்டு சென்று விட்டார் என்று கூறுகிறார். தற்போது சீரியலில் ஜனனி தன்னுடைய புது கம்பெனிக்கு பூஜை போட தன்னுடைய கணவருடன் வருகிறார்.

-விளம்பரம்-

ஜனனி-மெய்யப்பன் குடும்பம் சண்டை:

அங்கு மெய்யப்பன் குடும்பம் பூஜை போட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் ஜனனிக்கும் மெய்யப்பன் குடும்பத்திற்கும் வாக்குவாதம் நடைபெறுகிறது. இந்த சமயம் பார்த்து ஜனனியின் அம்மா, அப்பா வருகிறார்கள். இதைப் பார்த்து மெய்யப்பன் குடும்பம் அதிர்ச்சி ஆகிறார்கள். காரணம், ஜனனியின் அப்பா நாச்சியப்பன், மெய்யப்பன் குடும்பத்தை சேர்ந்தவர் தான். அவர் அந்த குடும்பத்தை விட்டு காதலுக்காக விலகி விட்டார். இவரைப் பார்த்து மெய்யப்பன் குடும்பம் கோபத்தில் திட்டுகிறார்கள். ஆனால், நாச்சியப்பன் அம்மா கதறி அழுகிறார்.

சீரியல் ட்ராக்:

அதேசமயம் ராமசாமி, கிருஷ்ணசாமி என்ன செய்வது என்று புரியாமல் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் அந்த கம்பெனி ஜனனிக்கு போகுமா? நாச்சியப்பனை மெய்யப்பன் குடும்பம் ஏற்றுக் கொள்ளுமா? இந்த உண்மை குணசேகரனுக்கு தெரிய வருமா? தேர்தலில் ஈஸ்வரி வெற்றி பெறுவாரா? போன்ற பல அதிரடித்திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement