தருண், சக்திக்கு கொடுத்த செம ட்விஸ்ட் – மெளன ராகம் சீரியலில் அடுத்து வரும் அதிரடி திருப்பம். என்ன தெரியுமா ?

0
1728
mounaragam
- Advertisement -

வருண் சக்திக்கு வில்லனாகிறார் தருண். மௌனராகம் சீரியலில் அடுத்து வரும் அதிரடி திருப்பம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுக்கும் சீரியல்களில் ஒன்று தான் மௌனராகம். மௌனராகம் சீசன் 1 சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால், கொரோனா லாக் டவுன் காரணமாக அந்த சீரியல் நிறுத்தப்பட்டிருந்தது.

-விளம்பரம்-

பின் சில மாதம் கழித்து மௌனராகம் சீசன் 2 என்று புதிய அத்தியாயத்துடன் சீரியல் வெளிவந்தது. மௌனராகம் சீசன் ஓன்னைவிட சீசன் 2-க்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து உள்ளது. சீரியலில் வருண், சக்தியை காதல் திருமணம் செய்து கொள்கிறார். அதேபோல் தருண், ஸ்ருதியை திருமணம் செய்து கொள்கிறார். சில மாதங்களுக்கு முன்பு தான் ஸ்ருதி-சக்தி அக்கா, தங்கை என்ற உண்மை மனோகரன் குடும்பத்திற்கு தெரியவந்தது.

- Advertisement -

மௌனராகம் 2 சீரியல்:

இதனால் சீரியலில் பல திருப்பங்கள் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் தொடங்கியதில் இருந்தே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் வகிக்கிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது மௌனராகம் சீரியல் கடந்த சில வாரங்களாகவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கின்றது. அதுவும் நாளுக்கு நாள் அடுத்து என்ன என்ற ஆர்வத்துடன் விறுவிறுப்பாக சீரியல் செல்வதால் இளைனர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர்.

காதம்பரி செய்த வேலை:

சக்தியை கொலை செய்ய காதம்பரி ஏற்பாடு ஆள் ஒருவரை ஏற்பாடு செய்கிறார். ஆனால், சக்தியை காப்பாற்றும் முயற்சியில் கார்த்திக் கிருஷ்ணா கத்தி குத்து வாங்கி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருந்தார். இப்போது கார்த்திக் கிருஷ்ணா குணமாகி டிஸ்சார்ஜ் செய்து இருக்கிறார்கள். உடனே, காதம்பரியும், ஸ்ருதியும் கார்த்திக் கிருஷ்ணாவை சென்னைக்கு அழைத்து செல்ல வேண்டும் என முயற்சி செய்கிறார்கள். ஆனால், கார்த்திக் கிருஷ்ணா நான் இங்கேயே இருக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார்.

-விளம்பரம்-

சீரியலின் கதை:

இதனால் கோபமடையும் காதம்பரி,ஸ்ருதி அங்கிருந்து சென்றுவிடுகிறார்கள். மேலும், எல்லா பிரச்சனைக்கும் சக்திக்கு முழு ஆதரவாக வருண் இருக்கிறார். ஆனால், ஸ்ருதியின் பேச்சை கேட்க ஆரம்பித்துவிட்டார் தருண். தருணுக்கு இப்போது சக்தி மற்றும் வருண் மீது கோபம் வருகிறது. அவர் கொஞ்சம் கொஞ்சமாக காதம்பரி மற்றும் ஸ்ருதி பக்கம் சாய தொடங்கிவிட்டார். ஆனால், இந்த விஷயம் எல்லாம் மனோகருக்கு தெரியாது. இந்த நிலையில் தற்போது சீரியலின் அடுத்த கட்டம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சீரியலின் அடுத்த கட்டம்:

அதாவது, சுருதியின் பேச்சை கேட்டு தருண், சக்தி-வருணுக்கு எதிராக மாறுவதுதான் சீரியலின் அடுத்த கட்டம் எனக் கூறப்படுகிறது. அதுபோல ஸ்ருதி பொய்யான பிம்பத்தை தருணிடம் ஏற்படுத்தி விட்டார். வருணும் ஸ்ருதியிடம் சண்டை போடுவது தருணுக்கு பிடிக்கவில்லை. இதனால் தருண், வருண்- சக்திக்கு எதிராக மாறுவார். கதை இன்னும் சூடுபிடிக்க அண்ணன்- தம்பி பிரியும் சூழ்நிலை விரைவில் வரும் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Advertisement