ஆதிரையை கொடுமைப்படுத்தும் ஜான்சி ராணி, சிங்கமாக மாறிய தர்ஷினி. பரபரப்பின் உச்சத்தில் எதிர் நீச்சல் தொடர்.

0
2674
Ethirneechal
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பாராத புதிய ட்விஸ்ட் குறித்த புரோமோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சன் டிவி எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடுக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-

அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, சில மாதங்களாகவே சீரியலில் ஆதிரை- அருண் குறித்த காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. ஆதிரை- அருண் திருமணத்தை எப்படியாவது நடத்தி வைக்க வேண்டும் என்று வீட்டில் உள்ள பெண்கள் எல்லோரும் திட்டம் போடுகிறார்கள்.

சீரியலின் கதை:

கடைசியில் கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடந்து விட்டது. இது பலருக்குமே ஷாக்கிங் ஆகத்தான் இருந்தது. இனி கரிகாலனுடன் சேர்ந்து வாழ்வாரா ஆதிரை?அருணின் நிலைமை என்ன? குணசேகரனின் எண்ணம் நிறைவேறுமா? ஜனனி என்ன செய்து போகிறார்? என்று பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் புதிய டீவ்ஸ்ட் குறித்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, ஆதிரை-கரிகாலன் இருவரும் மாப்பிள்ளை விருந்திருக்கு குணசேகரன் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

எதிர்நீச்சல் சீரியல் ப்ரோமோ:

அந்த சமயம் பார்த்து ஞானம்- ரேணுகாவின் மகள் வயதுக்கு வந்து விடுகிறார். இதனால் மாப்பிள்ளை விருந்தை அவர்கள் செய்யாமல் சண்டை போடுகிறார்கள். பின் ஜான்சி ராணி வீட்டிற்கு வந்து ஆதிரையும் கரிகாலனும் அழைத்துச் செல்லப் பார்க்கிறார். ஆனால், ஜனனி ஆதிரையை விடாமல் தடுக்கிறார். உடனே ஜான்சி ராணி கோபம் வந்து ஆதிரையின் கையை பிடித்து தரதரவென்று இழுத்து செல்கிறார். இதனால் வீட்டில் கலவரமே வெடிக்கிறது.

சீரியலில் தர்ஷினி செய்த செயல்:

இதை பார்த்துக் கொண்டிருந்த தர்ஷினி ஆத்திரம் தாங்க முடியாமல், ஸ்டாப்இட்! இங்கிருந்து போறீங்களா? இல்லை போலீசுக்கு போன் பண்ணவா? என்று மிரட்டுகிறார். இதைப் பார்த்து கரிகாலன், இவர்கள் செய்தாலும் செய்வாங்க அம்மா. மாமா மாதிரி வெறும் வாயில் வடை சுட மாட்டார்கள் என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் ஜான்சி ராணி அமைதியாக நிற்கிறார். இனி தர்ஷினி இப்படி பேசியதற்கு குணசேகரன் என்ன சொல்லப் போகிறார்? குணசேகரனின் முடிவுதான் என்ன? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றார்கள்.

Advertisement