எதிர் நீச்சல் முடிந்த கையோடு மகளுக்கு திருமணம் முடித்த திருச்செல்வம் – இதோ ரிசப்ஷன் வீடியோ

0
182
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் வீட்டில் நடக்கும் விசேஷம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸிங் டப்பிங் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து வந்தார். பின் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினார்.

-விளம்பரம்-

அதற்குப் பிறகு தான் திருச்செல்வம் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் பணியில் இறங்கினார். அந்த வகையில் இவர் முதன் முதலாக 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த மெட்டி ஒலி என்ற தொடரில் இணை இயக்குனராக பணியாற்றினார். அந்த தொடரின் மூலம் நடிகராகவும் திருச்செல்வம் அறிமுகமானார். அதற்கு பிறகு கோலங்கள் என்ற தொடரை இயக்கி சின்னத்திரை இயக்குனராக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார் திருச்செல்வம்.

- Advertisement -

திருசெல்வம் இயக்கிய சீரியல்கள்:

இந்த தொடர் மிக பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அதோடு இந்த தொடருக்காக பல விருதுகள் வாங்கி இருக்கிறார் திருச்செல்வம். இதனை தொடர்ந்து இவர் அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய சீரியலில் நடித்தும் இருக்கிறார். மேலும், திருச்செல்வம் சீரியல் எல்லாம் இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியல்:

அதற்கு காரணம், இவர் இயக்கும் சீரியல் பெரும்பாலும் பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்ட கதைகளாக அமைந்திருக்கும். தற்போது இவர் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டம், பெண்களின் உரிமையும் மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்து வருகிறது. மேலும், இந்த சீரியலில் ஆதி குணசேகரன் ஆக நடித்த மாரிமுத்து மாரடைப்பால் கடந்த ஆண்டு இறந்தார்.

-விளம்பரம்-

சீரியல் கதை:

இவருடைய இறப்பு பலருக்கும் பேரதிர்ச்சி இருந்தாலும், எதிர்நீச்சல் சீரியலுக்கு பெரும் இழப்பு. காரணம் இவருடைய கதாபாத்திரம் தான் இந்த சீரியலுக்கு ஆணிவேர் என்று சொல்லலாம். இவருடைய மறைவிற்குப் பிறகு வேலு ராமமூர்த்தி இந்த சீரியலில் நடித்து வருகிறார். இவர் வந்த பிறகும் சீரியல் நன்றாகத்தான் சென்று கொண்டிருக்கின்றது. அதோடு இந்த சீரியலில் ஜீவானந்தம் என்ற ரோலில், திருச்செல்வம் நடித்து வருகிறார். தற்போது சீரியலில் பெண்கள் எல்லோருமே சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்றும், அதேசமயம் ஞானம்- கதிருக்கு குணசேகரனின் உண்மை முகம் தெரிந்து அவர்கள் பெண்களுக்கு உறுதுணையாக நிற்கிறார்கள்.

திருச்செல்வம் வீட்டில் விசேஷம்:

மொத்த குடும்பமே குணசேகரனுக்கு எதிராக நிற்க அவர்களை அழிக்க குணசேகரன் திட்டம் போடுகிறார். இப்படி அடுத்து என்ன என்ற பரபரப்பாக சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இயக்குனர் திருச்செல்வம் வீட்டில் நடக்கும் விசேஷம் குறித்த தகவல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, திருச்செல்வம் மகள் பிரியதர்ஷினிக்கு இன்று ஜூன் மாதம் 10 ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.

Advertisement