அண்ணியாரே(பிரேமலதா) ஓரு கட்டத்துல சொன்னாங்க – விஜய் குறித்து மீசை ராஜேந்திரன் சொன்ன விஷயம்.

0
711
- Advertisement -

சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். பின் கடந்த மாதம் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து பூரணமாக குணமடைந்து விட்டதாக விஜயகாந்த் வீடு திரும்பி இருந்தார்.

-விளம்பரம்-

பின் சில தினங்களுக்கு முன் காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். மேலும், கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றார்கள். விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. நேற்று முன் தினம் மாலை விஜயகாந்தின் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.. லட்சக்கணக்கான மக்கள், தொண்டர்கள், ரசிகர்கள் நேரில் சென்று விஜயகாந்தின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள்.

- Advertisement -

அந்த வகையில் நடிகர் விஜய் அவர்கள் விஜயகாந்தின் இறப்பிற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார். ஆனால், விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போது விஜய் நேரில் ஒருமுறை கூட சந்திக்கவில்லை என்று பலரும் விமர்சித்து இருந்தார்கள். குறிப்பாக, நடிகரும் விஜயகாந்துக்கு நெருக்கமானவருமான மீசை ராஜேந்திரன், விஜய்யை விமர்சித்து பேட்டி எல்லாம் அளித்திருந்தார். அதில் அவர், தற்போது புகழின் உச்சத்தில் உள்ள விஜயின் ஆரம்ப காலதிரைப்பயணம் மோசமாக இருந்தது.

முதலில் வந்த படங்கள் எதுவும் வெற்றியடையவில்லை. பின் எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய மகனை எப்படியாவது மக்கள் மத்தியில் பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக நடிகர் விஜயகாந்த் உடன் நடிக்க வைக்க முடிவு செய்து இருந்தார். அவரும் சம்மதம் சொன்னார். அவர் விஜய் உடைய படத்தில் எளிமையான ரோலில் நடித்திருந்தார். வேறு எந்த ஹீரோவாக இருந்தாலும் இதை ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். இந்த படத்தின் மூலம் தான் விஜய் மக்கள் மத்தியிலேயே பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

இப்படி விஜய் பிரபலமாக காரணமாக இருந்த விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அவரை ஒரு முறை கூட நேரில் சென்று விஜய் சந்திக்கவில்லை. இதுதான் ரொம்ப வருத்தத்தை அளிக்கிறது என்று கூறி இருந்தார். இந்த நிலையில் இது தொடர்பாக தற்போது மீசை ராஜேந்திரன், அண்ணியாரே ஒரு கட்டத்தில் சொன்னார்கள். நீங்கள் அவர்களைப் பற்றி பேச வேண்டாம், அவர்களே தெரிந்து புரிந்து கொண்டு தான் பார்க்க வரணும். நாம் ஒருவரை சொல்லி கட்டாயப்படுத்தி பார்க்க வர வைக்க கூடாது.

இனி பேச வேண்டாம் என்று சொன்னார்கள் .அதற்குப் பிறகு நான் எந்த பேட்டியில் அதைப்பற்றி பேசவில்லை. என்னைப் போன்று பலருக்குமே வருத்தம் இருக்க செய்யும். அதேபோல் விஜய்க்கும் தான் வருத்தம் இருக்கும். உயிருடன் இருக்கும் போது ஒரு முறையாவது பார்த்திருக்கலாம் என்று அவருக்குள்ளும் வேதனை இருக்கத்தான் செய்யும் என்று கூறியிருந்தார். ஆனால், சில சேனலில், விஜய் ஒரு வருடமாக கேப்டனை பார்க்க அப்பாயின்மென்ட் கேட்டதாகவும், பிரேமலதா தான் அதை மறுத்ததாகவும் பயங்கரமாக உருட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement