அட, நம்ம Ags-ற்காக இந்தியன்2 வில் ஷங்கர் செய்துள்ள மாற்றம் – அவரே சொன்ன தகவல் இதோ.

0
603
inidian2
- Advertisement -

தமிழ் சினிமா உலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த படம் “இந்தியன்”. இந்த திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்து இருந்தார்கள். 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் 2” படம் உருவாகி வந்தது.

-விளம்பரம்-

இந்தியன் 2 :

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், இந்த ‘இந்தியன் 2’ படம் அதிகபட்ச செலவில் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஆர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக தற்போது மாரிமுத்து நடித்து வருகிறார்.

- Advertisement -

மாரிமுத்து :

எதிர்நீச்சல் மாரிமுத்து கண்ணும் கண்ணும் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு குணச்சித்திர நடிகராகவும் பல படங்களின் நடித்து விட்டார். ஆனால் இவர் முதலில் இயக்கிய கண்ணும் கண்ணும் படம் அந்த அளவுக்கு பெரிய வெற்றியை தரவில்லை ஆனாலும் அந்த படத்தில் வரும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் மிகவும் பிரபலமாக இன்றும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்நீச்சல் சீரியல் :

அப்படத்தை தொடர்ந்து புலிவால் என்கிற படத்தை இயக்கினார். இன்னொரு பக்கம் பிரபல இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான “யுத்தம் செய்” என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் தற்போது குணச்சித்திர நடிகராக நடித்த வருகிறார். மேலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சிரியலிலும் நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது மிகவும் பிரபலமான சிரியலாக இருந்து வருகின்றது.

-விளம்பரம்-

இந்தியன் 2வில் மாரிமுத்து :

இந்த நிலையில் தான் மாரிமுத்து தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தியன் 2 படத்தில் பல வில்லன்கள் நடிக்கின்றனர் என்று முன்னரே கூறியிருந்த நிலையில் இவரும் அவர்களில் ஒரு வில்லனாக நடித்து வருகிறார். ஆனால் தொடக்கத்தில் இவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு இயக்குனர் மற்றும் நடிகரான சமுத்திரக்கனி தான் நடிப்பதாக இருந்தது.

ஷங்கர் செய்த மாற்றம் :

ஆனால் மாரிமுத்து கொஞ்சம் வயதானவராகவும், அதே சமயம் எதிர்நீச்சல் சீரியலில் அண்ணன் கதாபாத்திரத்திலும் நடிப்பதினால் மாரிமுத்தை அண்ணனாகவும், சமுத்திரக்கனியை தம்பியாகவும் இயக்குனர் ஷங்கர் நடிக்க வைக்க உள்ளார். மேலும் அண்ணன் மாரிமுத்தை கெட்டவராகவும், தம்பி சமுத்திரக்கனியை நல்வரராகவும் மாற்றியுள்ளார் இயக்குனர். ஷங்கர் செய்த இந்த மாறுதலை மாரிமுத்தே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் கமலஹாசன், சமுத்திரக்கனி, காஜல் போன்ற பல பிரபலங்கள் நடித்து வரும் ஆகடோபர் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

Advertisement