15 முறை Breakup, பல சண்டை,ஆனால் அனைத்தையும் தாண்டி – கொரோனோவால் மறைந்த தனது மனைவி குறித்து அருண்ராஜா காமராஜா உருக்கம்.

0
566
- Advertisement -

இறந்த தன் மனைவி குறித்து வேதனையாக இயக்குனர் அருண் ராஜா காமராஜ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனராக திகழ்பவர் அருண் ராஜா காமராஜ். இவர் நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். அதிலும் தெறி, பென்சில், கபாலி, ஜிகர்தண்டா போன்ற படங்களில் இவர் எழுதிய பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகி இருந்த கனா படம் மூலம் அருண் ராஜா காமராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. பின் இவர் உதயநிதியை வைத்து நெஞ்சுக்கு நீதி என்ற படத்தை எடுத்து இருந்தார். இந்த படத்தை ஜீ5 ஸ்டுடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்து இருந்தார். இந்த படம் பல சமூக கருத்துக்களை முன்வைத்து இருந்தது.

- Advertisement -

அருண்ராஜா திரைப்பயணம்:

இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. தற்போது அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான வெப் சீரிஸ் லேபிள். இதில் ஜெய், தன்யா, மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண்ராஜ், ஸ்ரீமன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டுதான் இந்த வெப் சீரிஸ் வெளியாகியிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனிடையே சில வருடங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அருண்ராஜா மனைவி சிந்துஜா சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தார்.

அருண் ராஜா மனைவி இறப்பு:

இதில் சிகிச்சை பலனின்றி சிந்துஜா காலமானார். மனைவி இறந்ததால் சில காலம் அருண்ராஜா சோகத்தில் இருந்தார். இது அருண்ராஜாவுக்கு மிக பெரிய இழப்பு. இந்நிலையில் சமீபத்தில் அருண் ராஜா காமராஜ் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய மனைவி குறித்து கூறியிருந்தது, நான் பலரை ஒன் சைடு ஆக காதலித்திருக்கிறேன். ஆனால், என்னை காதலித்த ஒரே பெண் என்றால் அது என்னுடைய மனைவி சிந்துஜா தான். எங்களுக்குள் 10, 15 முறை பிரேக் அப் நடந்திருக்கிறது.

-விளம்பரம்-

அருண்ராஜா பேட்டி:

பிரேக் அப் ஆனாலும் மீண்டும் நாங்கள் சேர்ந்து விடுவோம். பலமுறை பிரேக் அப் ஆகி சேர்ந்திருக்கிறோம். எங்களுக்குள் அடிதடி எல்லாம் நடந்திருக்கிறது. ஆனால், உடனே சமாதானம் ஆகி பேசிக் கொள்வோம். அந்த மாதிரி ஒரு சண்டை நடந்தது என்று அடையாளம் இல்லாத அளவுக்கு சகஜமாக பேசுவோம். பின்னர் ஒரு கட்டத்தில் எத்தனை சண்டை வந்தாலும் ஒருவர் இல்லாமல் ஒருவர் இருக்க முடியாது என்பதை புரிந்து கொண்டோம். காதலிக்கும் போதே நாங்கள் அவ்வளவு சண்டைகள் என்றால் திருமணத்திற்கு பிறகு எவ்வளவு சண்டைகள் நடந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

தன் மனைவி குறித்து சொன்னது:

எங்களுக்குள் ஏன் இவ்வளவு சண்டை வருகிறது என்று புரிந்து கொண்டோம். எங்களுக்குள் இருந்த அதீத அன்பு, அதிக எதிர்பார்ப்பு தான் இந்த சண்டைகளுக்கெல்லாம் காரணம். இதை கொரோனா காலத்தில் புரிந்து கொண்டோம். எங்கள் வீட்டிற்கு எவ்வளவு செலவாகும், என்ன இருக்கிறது, என்ன இல்லை என்று கூட எனக்கு தெரியாது. அனைத்தையும் அவள் தான் பார்த்துக் கொண்டார். கொரோனா காலத்தில் புரிதலுடன் அன்பாக வாழ்ந்து வந்தோம். சூட்டிங் சென்றபோது கூட அவர் இல்லாமல் எனக்கு தூக்கம் வரவில்லை. அவரையும் சூட்டிங்க்கு அழைத்துச் செல்வேன். ஆனால், அவள் என்னை விட்டு சென்று விட்டாள். அவள் இல்லாமல் தான் இப்போது நான் படப்பிடிப்புக்கு செல்கிறேன் என்று வேதனையுடன் கூறி இருந்தார்.

Advertisement