‘இது மாதிரி எல்லாம் நடக்குதான்னு கேகேக்குறீங்க’ – எதிர் நீச்சல் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து இயக்குனர் கொடுத்த விளக்கம்.

0
1011
thirumurugan
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலுக்கு வரும் நெகட்டிவ் கருத்துக்கு இயக்குனர் திருச்செலவம் கொடுத்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து இருந்தார். பின் தமிழ், மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினார். அதற்குப் பிறகு தான் இவர் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் பணியில் இறங்கினார்.

-விளம்பரம்-

இவர் முதன்முதலாக 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த மெட்டி ஒலி என்ற தொடரில் இணை இயக்குனராக பணியாற்றினார். அந்த தொடரின் மூலம் திருச்செல்வம் நடிகராகவும் அறிமுகமானார். அதற்கு பிறகு கோலங்கள் என்ற தொடரை இயக்கி சின்னத்திரை இயக்குனராக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த தொடர் மத்தியில் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களை திருச்செல்வம் இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

திருச்செல்வம் சீரியல்கள்:

மேலும், திருச்செல்வம் இயக்கிய சீரியல்கள் எல்லாம் இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. அதற்கு காரணம் இவர் இயக்கும் சீரியல் எல்லாம் பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்ட கதையாக அமைந்திருக்கும். தற்போது இவர் சன் டிவியில் எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை மையமாகக் கொண்ட கதை. இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன் தம்பி வாழுகிறார்கள்.

எதிர்நிச்சல் சீரியல்:

இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்களை எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக கருதி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்து வந்து அவர்களை வீட்டு வேலை செய்ய வைக்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். தற்போது சீரியலில் குணசேகரன் மகளுக்கு நடக்கும் சடங்கு விழாவை ஈஸ்வரியின் தந்தை சிறப்பாக நடத்த எல்லாம் ஏற்பாடுகளையும் செய்கிறார்.

-விளம்பரம்-

சீரியல் கதை:

ஆனால், அதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று குணசேகரனும் அவருடைய தம்பிகளும் முடிவு செய்கிறார்கள். அடுத்து என்ன நடக்கும்? என்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. கொஞ்சம் கூட எதிர்பார்ப்பு குறையாமல் இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருந்தாலும் இந்த சீரியல் குறித்து சிலர் நெகட்டிவ் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் நெட்டிசன்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக திருச்செல்வம் அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பல ரசிகர்கள் என்னிடம் எதற்காக சீரியலில் படித்த பெண்களை வீட்டில் சமையல் அறைக்குள்ளே அடைத்து வைக்க பார்க்கிறீர்கள்? இந்த மாதிரி எல்லாம் இப்போ நடக்கிறதா? என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்தார்கள்.

திருச்செல்வம் வெளியிட்ட வீடியோ:

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இன்னும் நடக்கிறது. இந்த மாதிரி சம்பவங்கள் நகர்ப்புறங்களில் குறைந்து இருக்கிறது. கிராமப்புறங்களில் இப்பவும் நிறைய இருக்கிறது. படித்த பெண்களின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. என்னுடைய அனுபவத்திலிருந்து தான் நான் இப்படி ஒரு கதையை எடுத்து இருக்கிறேன். பெண்கள் செய்ய மாட்டேன் என்று கூறி செய்வதில்லை. அவர்கள் இந்த மாதிரி வேலைகளை செய்ய வேண்டும் என்று ஆண்கள் அல்லது மற்றவர்கள் செய்ய வைக்கிறார்கள் என்பதை சொல்லும் ஓரிடமாக தான் இந்த சீரியல் இருக்கிறது.

சீரியல் குறித்து திருச்செல்வம் சொன்னது:

எல்லோருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. இது எதை நோக்கி தொடர்கிறது என்றால் அந்த பெண்கள் அழுத்தத்தில் இருந்து வெளியேறி சாதிக்க போவதை பற்றி சொல்வது. இது எங்க வீட்டிலும் நான் பார்த்த பல பெண்களுக்கு நடந்து இருக்கிறது. பெண்களை வீட்டிற்குள் வைப்பது எனது நோக்கம் அல்ல. அப்படி அடைக்கப்படும் போது அவர்கள் எடுக்கும் முடிவு பற்றி தான் இந்த சீரியலின் கருத்து இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

Advertisement