எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத டீவ்ஸ்ட் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. சன் டிவி எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல்.
மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, சில மாதங்களாகவே சீரியலில் ஆதிரை- அருண் குறித்த காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. கடைசியில் கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடந்து விட்டது.
எதிர்நீச்சல் சீரியல்:
தற்போது சீரியலில் ஆதிரை-கரிகாலன் இருவரும் மாப்பிள்ளை விருந்திருக்கு குணசேகரன் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து ஞானம்- ரேணுகாவின் மகள் வயதுக்கு வந்து விடுகிறார். இதனால் மாப்பிள்ளை விருந்தை அவர்கள் செய்யாமல் சண்டை போடுகிறார்கள். பின் ஜான்சி ராணி வீட்டிற்கு வந்து ஆதிரையும் கரிகாலனும் அழைத்துச் செல்லப் பார்க்கிறார். ஆனால், ஜனனி ஆதிரையை விடாமல் தடுக்கிறார். உடனே ஜான்சி ராணி கோபம் வந்து ஆதிரையின் கையை பிடித்து தரதரவென்று இழுத்து செல்கிறார்.
சீரியலின் கதை:
இதனால் வீட்டில் கலவரமே வெடிக்கிறது. இதை பார்த்துக் கொண்டிருந்த தர்ஷினி ஆத்திரம் தாங்க முடியாமல் ஜான்சி ராணி,கதிர்,கரிகாலன் இடம் சண்டை போடுகிறார். இன்னொரு பக்கம், பட்டம்மாவின் சொத்தை தங்களுடைய பெயருக்கு மாற்ற ஜீவானந்தம் முழு முயற்சியில் ஈடுபடுகிறார். அதேசமயம் சொத்துக்கள் முழுவதையும் தன் பெயரில் மாற்ற ஆதி குணசேகரன் போராடுகிறார். இதனால் இவர் வீட்டில் உள்ள மருமகளின் பெயரில் இருக்கும் சொத்துக்களை தன் பெயரில் மாற்றம் ஏற்படுகிறார். பின் நந்தினியும் ரேணுகாவும் கையெழுத்து போட்டு கொடுக்கிறார்கள்.
இன்றைக்கான ப்ரோமோ:
ஆனால், சக்தி முடியாது என்று மறுக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான புரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், ஆதி குணசேகரன்- ஞானம்-கரிகாலன் மூவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஆதி குணசேகரன், பொம்பளைங்களை எப்படி நடத்தணுமோ அப்படித்தான் நடத்தணும் என்று சொல்கிறார். அதற்கு கரிகாலன், ஆதிரை மேல நான் வைத்திருக்கும் காதல் என்னை தடுக்கிறது என்று சொன்ன உடனே ஆதி குணசேகரன் பெரிய ரோமியோ ஜூலியட் காதல், அப்படியே நிலாவிலிருந்து குதிச்சிட்டாங்க என்று இரண்டு பேரையும் திட்டுகிறார்.
கோபத்தில் குணசேகரன்:
பின் ஆதிகுரசேகரன் தன்னுடைய மகளை அழைத்து, நீ மாமாவை அடிக்க போனியா? மன்னிப்பு கேள் என்று கேட்கிறார். அதற்கு தர்ஷினி முடியாது என்று கத்தியபடி அங்கிருந்து செல்கிறார். இதை எதிர்பார்க்காத குணசேகரன் அதிர்ச்சியாகி என்னப்பா! இப்படி ஆரம்பிச்சு இருக்காங்க? என்று சொல்ல, அந்த நேரத்தில் ஞானம் மீசையை முறுக்கிறார். அப்போது கோபமாக குணசேகரன், இனிமே எதுக்கு நம்ம மீசையை முறுக்கி திரியணும் என்று பேசுகிறார். இதைக் கண்டு அங்கிருந்த பெண்கள் எல்லோரும் சிரிக்கிறார்கள். இதனால் இனி வீட்டில் பெரிய கலவரமே வெடிக்கப் போகிறது. இதை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.