கிப்டாக வந்த கிளிக்கு 2.5 லட்சம் அபராதம் – ரோபோ ஷங்கர் சிக்கலில் சிக்க காரணம் பாலா மற்றும் புகழ் தானா ?

0
1019
Robo
- Advertisement -

சமீபத்தில் ரோபோ சங்கர் வீட்டில் உள்ள கிளிகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டு தேசிய பூங்காவில் ஒப்படைத்திருக்கும் சம்பவம் குறித்து ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா பிரபல ஊடகம் விளக்கம் கேட்டிருந்தது. அதற்க்கு பதிலளித்த ரோபோ சங்கர் “இந்த கிளிகளை நாங்கள் பல காலமாக வளர்த்து வருகிறோம் ஒருநாள் இரண்டு நாள் கிடையாது மூன்றரை ஆண்டுகளாக வளர்த்து வருகிறோம். நாங்கள் இதனை வனத்துறையிடம் மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யவில்லை.

-விளம்பரம்-

இந்த கிளிகளை நாங்கள் பணம் கொடுத்து வாங்கவில்லை இது என்னுடைய தோழி ரயில்வே துறையில் பணியாற்றி வருகிறார் அவர் பரிசாக கொடுத்துதான் அது. எங்களுக்கும் கிளிகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனால் தான் அவற்றிற்கு பிகில், ஏஞ்சல் என்று பெயர் வைத்து வளர்த்தோம், அவையும் எங்களை அக்கா, அம்மா என்றுதான் பேசும். குறிப்பாக என்னுடைய கணவரை ரோபோ சங்கர் என்று தான் கூறும்.

- Advertisement -

அனுமதி பெறாததற்க்கு காரணம் :

கடந்த மூன்றறை ஆண்டுகள் இந்த கிளிகளை எங்ககளின் குழந்தைகள் போன்று தான் வளர்த்து வந் தோம். பரிசாக கிடைத்த கிளி என்பதினால் நாங்கள் அனுமதி பெறவில்லை, அதே போலத்தான் நாங்கள் வனத்துறையிடமும் சொல்லவில்லை. தற்போது நாங்கள் இலங்கையில் உள்ளோம் வீட்டிற்கு. நாங்கள் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்து கிளிகளை எடுத்து சென்றிருக்கின்றனர். நாங்கள் ஊருக்கு வந்ததும் இதை பற்றி விளக்கமளிக்கவுள்ளோம் என்று கூறினார் பிரியங்கா.

எப்படி வெளியில் தெரிந்தது :

கிளிகளை வளர்த்து வருவது எப்பிடி தெரிந்தது என்று தெரியவில்லை, சமீபத்தில் தனியார் ஊடகங்கம் ஹோம் டூர் மற்றும் குக்கிங் வீடியோ எடுத்தார்கள் அதில் கிளிகள் இருந்தன ஒரு வேளை அதனால் தெரிந்திருக்கலாம். கிளிகளை மறைக்கும் எண்ணம் எங்களுக்கு இருந்தால் நாங்கள் ஏன் வீடியோவில் கிளிகளை காட்ட போகிறோம். பிகிலும் ஏஞ்சலும் இல்லாதது மனதிற்கு வருத்தமாக இருந்தாலும் வனத்துறையினர் அவர்களது வேலையை தான் செய்திருக்கின்றனர்.

-விளம்பரம்-

அபராதம் விதிப்பு :

அவை இப்போது இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று கூறினார் ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா. இப்படி ஒரு நிலையில் கிளிகளை அனுமதியின்றி வளர்த்ததற்காக இன்று இரண்டரை ரூபாய் அபராதம் விதித்து வனத்துறை அதிர்ச்சியூட்டியிருக்கிறது. இதுகுறித்து பேசி இருக்கும் பிரியங்கா ‘நாங்கள் இருக்கும் சூழலுக்கு, இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் என்பது ரொம்ப பெரியத்தொகை.

புகழ் பாலாவால் வந்த வினை :

இந்தத் தொகையை கட்டுவது கஷ்டம்தான். ஆனாலும், அரசு விதிமுறைகளை கடைப்பிடிப்போம். ‘ என்று கூறியுள்ளார். மேலும், இந்த அபராத தொகையை கட்ட தவறும்பட்சத்தில் 6 மாதம் சிறை தண்டனை என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறதாம். சிவனே என்று கிடந்த ரோபோ ஷங்கர் வீட்டிற்கு Home Tour என்ற பெயரில் சென்று கூத்தடித்த பாலா மற்றும் புகழால் தான் இத்தனை பிரச்சனையும் என்று கேலி செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement