எதிர்நீச்சல் தர்ஷினி செய்த கின்னஸ் ரெகார்ட்- அடேங்கப்பா, இவருக்குள் இவ்வளோ திறமையா!

0
2054
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல் நடிகை கின்னஸ் ரெக்கார்ட் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல்.

-விளம்பரம்-

சில மாதங்களாகவே சீரியலில் ஆதிரை- அருண் குறித்த காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. ஆதிரை- அருண் திருமணத்தை எப்படியாவது நடத்தி வைக்க வேண்டும் என்று வீட்டில் உள்ள பெண்கள் எல்லோரும் திட்டம் போடுகிறார்கள். ஆனால், கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடந்து விட்டது. இது பலருக்குமே ஷாக்கிங் ஆகத்தான் இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்று பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

மேலும் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் மற்றும் ஈஸ்வரின் மகளாக தர்ஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை மோனிஷா. இந்த சீரியலின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் இவருக்கு சீரியலில் சடங்கு செய்வது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி இருந்தது. அதற்குப் பிறகு இவருடைய காட்சிகள் பெரிதாக இடம் பெறவில்லை. இருந்தாலும், இவர் சீரியலில் தனக்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நடித்துக் கொண்டு வருகிறார்.

எதிர்நீச்சல் சீரியலில் மோனிஷா:

இந்த நிலையில் நடிகை மோனிஷா குறித்து பலரும் அறிந்திராத தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை மோனிஷா அவர்கள் ஒரு கின்னஸ் ரெக்கார்ட் ஹோல்டர். இவருடைய சகோதரியும் இவரும் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்கள் என்பது பலருக்குமே ஷாக்கிங் செய்தி தான். இந்தியாவில் முதல் முறையாக கின்னஸ் ரெக்கார்ட் படைத்த சகோதரிகள் என்ற பெயரை இவர்கள் பெற்று இருக்கிறார்கள். எதில் என்றால், இவர்கள் இரண்டு பேருமே சிலம்பத்தில் இந்திய அளவில் தேர்வாகி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மோனிஷா செய்த சாதனை :

பின் விளையாட்டு வீராங்கனையாக சென்று இன்டர்நேஷனல் அளவில் சிலம்பத்தில் கோல்ட் மெடல் பெற்றிருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் கராத்தே போன்ற பல தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். மேலும், கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா, ரியாலிட்டி ஷோ நடன நிகழ்ச்சி ஜோடி நம்பர் ஒன், ஜீ தமிழில் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் போன்ற பல நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டிருக்கிறார். அதற்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சந்திரகுமாரி என்ற சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

மோனிஷாவின் திறமை:

பின் கலர்ஸ் தமிழ் என பல சேனல்களிலும் இவர் நடித்திருக்கிறார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது எதிர்நீச்சல் சீரியல் தான். அதோடு இவர் எதிர்நீச்சல் சீரியலுக்கான ஆடிஷனில் எம் ஆர் ராதா குரலில் பேசி இருந்தார். இப்படி பல திறமைகளை நடிகை மோனிஷா கொண்டு இருக்கும் தற்போது தகவல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் மோனிஷாவை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement