கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த அச்சந்திப்பில் – அஜித்துடனான சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர் பதிவு.

0
344
ajith
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக திகழ்ந்துவரும் நடிகர் அஜித்குமாரின் தந்தை கடந்த மார்ச் 27ஆம் தேதி காலமாக்கினார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவருக்கு உடல்நிலை மோசமாக இருந்ததாக செய்திகள் வெளியாக இருந்தது. மேலும், அவருக்கு கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் சென்னையில் சிகிச்சை பெற்று வந் சுப்பிரமணி கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 84.

-விளம்பரம்-

தந்தை மறைவுக்கு பின்னர் அஜித்தின் குடுமபத்தினர் தங்கள் தந்தையின் இறப்பு குறித்து சோக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் ‘எங்களது தந்தையார் திரு பி எஸ் மணி (85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல் நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்திலேயே உயிர் நீத்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும் அக்கறையோடும் கவனித்து வந்தும் எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

- Advertisement -

நடிகர்கள் இரங்கல் :

மேலும் இறுதி சடங்கு குடும்ப நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதினால் உங்களுடைய இரங்கல்களை இ-மெயில் செய்யுமாறு கூறியிருந்தனர். இருப்பினும் அஜித் தந்தையின் இறப்பிற்கு முக்கிய பிரபலங்கள் மற்றும் நேரில் சென்று தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் அந்த வகையில் நடிகர் விஜய் நேரில் சென்று அஜித்துக்கு இரங்கல் தெரிவித்துஇருந்தார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டிற்கு தனது சூர்யா மற்றும் கார்த்தி காரில் சென்று சென்று அஜித்திற்கு ஆறுதல் கூறியுள்ளார்.

அரசியல் பிரபலங்ககள் :

அவர்களை தொடர்ந்து தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் அஜித்திற்கு ஆறுதல் தெரிவித்தார். இப்படியொரு நிலையில் தான் நேற்று அதிமுக கட்சி சார்பில் பல அரசியல் தலைவர்கள் நடிகை அஜித்திற்கு ஆறுதல் கூறினார்கள். குறிப்பிடத்தக்க வகையில் முன்னாள் அமைச்சர் விஜயாபாஸ்கர் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதோடு இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றி இட்டுள்ளார்.

-விளம்பரம்-

விஜயபாஸ்கர் ட்விட்டர் பதிவு :

அந்த பதிவில் “தமிழ்த்திரையுலகின் மிகமுக்கியமான முன்னணி நடிகர் திரு.அஜீத்குமார் அவர்களின் அன்புத் தந்தை மறைவையொட்டி மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி அவர்களின் சார்பாக முன்னாள் அமைச்சர் அண்ணன் கடம்பூர் ராஜு அவர்களுடன் அவரது இல்லம் சென்று ஆறுதல் தெரிவித்தோம். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த அச்சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுகிற வாய்ப்பு அமைந்தது.

அனுபவமும், மனப்பக்குவமும் நிறைந்த அவருடைய பேச்சில் எதார்த்தமும் உண்மையும் பிறர்க்கு உதவ வேண்டுமென்கிற தூய மனமும் வெளிப்பட்டது மிகுந்த பாராட்டுக்குரியது. ‘எண்ணம்போல் வாழ்க்கை, எண்ணம்போல் தான் வாழ்க்கை’ அன்புத் தந்தையின் ஆசியோடு தொடர்க! வெல்க!” என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement