மெர்சல் குறித்து கமல் மற்றும் விஜய் என்ன கூறினார்கள் – ஒளிப்பதிவாளர் விஷ்ணு

0
13107
cinemetagrapher-vishnu

இயக்குநர் அட்லீயின் முதல் குறும்படமான முகப்புத்தகத்தின் மூலம் உதவி இயக்குநராகத் தனது கெரியரை ஆரம்பித்தாலும், ஒளிப்பதிவாளராக வேண்டும் என்கிற தனது கனவை விடாமல் பிடித்துத் தற்போது மெர்சலாய் என்ட்ரி கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு. மெர்சலான அனுபவங்களைப் பற்றி கேட்க, அவரைத் தொடர்புகொண்டோம்.

mersalபடத்தோட விஷூவல் பார்த்துட்டு விஜய் என்ன சொன்னார்… அவருக்கு எந்த சீன் ரொம்பப் பிடிச்சதா சொன்னார்..?

- Advertisement -

‘‘அவர் படம் பார்த்துட்டு ரொம்பவே பாராட்டினார். சின்னச் சின்ன விஷயத்தையும் நோட் பண்ணி இது நல்லா இருந்துச்சு, அது நல்லா இருந்துச்சுனு எதையும் மறக்காம சொன்னார். ஷூட்டிங் ஸ்பாட்லேயே விஷூவல் பார்த்துட்டு பாராட்டினார். அவருக்கு ஆளப்போறான் தமிழன் சாங்கோட விஷூவல்தான் ரொம்பப் பிடிச்சிருந்ததுனு சொன்னார்.’’

mersal

-விளம்பரம்-

கமல் படம் பார்த்துட்டு என்ன சொன்னார்..?

‘‘நேற்று (22.10.2017) கமல் சாரோட ஆஃபிஸுக்குப் போய் படத்தைப் போட்டுக் காண்பிச்சோம். படம் பார்த்துட்டு `ரொம்ப நல்லா இருக்கு, ரொம்ப எமோஷனலா இருக்கு’னு சொன்னார். அவருக்கு நேரம் இல்லாதனால அதிகமா பேச முடியலை. போட்டோஸ் மட்டும் எடுத்துட்டு வந்துட்டோம்.’’

mersal

படத்தோட எந்த சீன் மேக் பண்றதுல சிரமமா இருந்துச்சு..?

‘‘ஃப்ளாஷ்பேக்ல வர திருவிழா சீன்தான் ஷூட் பண்றதுக்குச் சிரமமா இருந்துச்சு. தண்ணீரையும் தீயையும் சீஜில கொண்டுவருவது கஷ்டம். அப்படிக் கொண்டு வந்தாலும் யதார்த்தமா இருக்காது. மெர்சல் படத்தோட திருவிழா சீன்ல நீர், நெருப்பு என ரெண்டும் அதில் இருக்கும். அதுனாலேயே அந்த சீன் மேக் பண்றது கஷ்டமா இருந்துச்சு. அந்த சீன் எடுக்கும்போது யூனிட்டில் இருந்த அத்தனை பேரும் பேய் மாதிரி வேலை பார்த்தோம். கிட்டத்தட்ட 2,000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அந்த சீன்ல இருப்பாங்க. அவங்க எல்லோரும் ஏதாவது ஒரு வேலையைச் செய்துட்டு இருக்கணும். சும்மா நின்னுட்டு இருந்தா அது தனியா தெரியும். கூட்டத்தை கன்ட்ரோல் பண்றதும், தண்ணி, நெருப்புக்குள்ள போய் ஷூட் பண்றதும் கஷ்டமா இருந்துச்சு. இப்போ அந்த சீனோட அவுட்புட் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு.’’

மெர்சல் படத்தோட கதை சம்பந்தமா சில நெகட்டிவ் விமர்சனங்கள் இருக்கே..?

‘‘கதைக்கு நான் விளக்கம் கொடுக்க முடியாது. அதுக்கு என்னால ரியாக்டும் பண்ண முடியாது. இந்த மாதிரியான விமர்சனங்கள் பற்றி அட்லீ எங்களிடம் டிஸ்கஷ் பண்ணவும் மாட்டார். யார் என்ன வேணாலும் சொல்லட்டும் மக்கள் தியேட்டருக்கு வந்து என்ஜாய் பண்ணிட்டு போற மாதிரிதான் நாங்க படம் எடுத்திருக்கோம். யாரும் வருத்தப்படுற அளவுக்கு நாங்க படம் எடுக்கலை. இதுவே எங்களுக்குத் திருப்திதான்.’’

Advertisement