கருணாநிதி அருகில், தனது தந்தை ஸ்டாலின் கையில் குழந்தையாக உதயநிதி.

0
933
udhay
- Advertisement -

ஒரே சமயத்தில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒருகலாக இருந்து வருகிறார. குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் ஆதவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நான்கு படங்களை தயாரித்த பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார் உதயநிதி ஸ்டாலின். தனது முதல் படமே அமோக வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார் உதயநிதி.

ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பின்னர் ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க மிகவும் தடுமாறினார் உதயநிதி ஸ்டாலின். இடையில் இவரது நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதேபோல கண்ணேகலைமானே சைக்கோ போன்ற படங்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல வெற்றியை கொடுத்திருந்தது. தற்போது கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : திருமதி செல்வம் தொடருக்கு முன்பாகவே சூரி நடித்துள்ள சீரியல் – இதோ புகைப்படம்.

- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் நடிகர் உதயநிதி சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்றார். தொகுதியின் எம் எல் ஏவாக பொறுப்பேற்ற நாளில் இருந்தே அடிக்கடி தொகுதி விசிட் அடிக்கும் உதயநிதி, தொகுதிக்கு பல உதவிகளையும் மாற்றங்களையும் செய்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் உதயநிதி, தனது தந்தை ஸ்டாலினின் கையில் இருக்கும் குழந்தை பருவ புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதில் தனது தாத்தா, திரு. கலைஞர் கருணாநிதி மற்றும் தனது தந்தை, தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் இருக்கிறார் உதயநிதி. உதயநிதி இறுதியாக மிஸ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது உதயநிதி, கண்ணை நம்பாதே, ஏஞ்சல், ஆர்டிகள் 15 ரீமேக் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement