இந்த பையன பாத்து கத்துக்கோயா.அட்லிக்கு அட்வைஸ் செய்யும் ரசிகர்கள். வைரலாகும் வீடியோ.

0
48921
atlee
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் கார்த்திக் நரேனும் ஒருவர். 2016 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு கார்த்திக் நரேன் அவர்கள் நரகாசுரன் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்தாலும் இந்த படத்தை வெளியிடுவதற்கு பைனான்சியல் பிரச்சனை இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடிப்பில் உருவாகி உள்ள படம் மாஃபியா. இந்த சின்ன வயதிலேயே சினிமாவில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார் கார்த்திக் நரேன்.

-விளம்பரம்-

சமீபத்தில் கூட இவருக்கும், கௌதம் மேனனுக்கும் நடந்த பிரச்சனை குறித்து நிருபர் ஒருவர் கேட்டு இருந்தார்.அதற்கு புத்திசாலித்தனமாக கார்த்திக் இது ஒரு அனுபவம் என்று கூறினார். பொதுவாகவே சினிமாவில் திரைப்படங்கள் எல்லாம் உருவாக்க ஆறு மாதங்கள், ஒரு வருடம் ஆகும் என்று சொல்வார்கள். ஆனால், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் படங்கள் எல்லாம் குறுகிய காலத்திலேயே அதாவது 40 நாட்களில் படத்தை எடுத்து விடுவார். சமீபத்தில் நடந்த பேட்டியில் இது குறித்து அவரிடம் கேட்ட போது கார்த்திக் நரேன் கூறியது,

- Advertisement -

பொதுவாகவே நான் இயக்கும் படங்கள் எல்லாம் 40 நாட்களுக்கு முன்னாடியே முடித்து விடுவேன். துருவங்கள் பதினாறு 28 நாட்கள், நரகாசுரன் 41 நாட்கள், மாஃபியா 33 நாட்கள் தான். சொல்லப் போனால் எல்லாமே திட்டமிடல் செயல் மூலம் தான் செய்ய முடியும். முதலில் ஸ்ரிக்ப்ட்டை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். கதை எங்கு தொடங்கி எதில் முடிவடைகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முன்னாடியே நான் ஸ்ரிக்ப்ட்டை எல்லாம் ரெடி பண்ணி வைத்துக் கொள்வேன். பின் அதுக்கேத்த மாதிரி படப்பிடிப்புகளை நடத்துவேன். என்னுடைய படங்கள் இவ்வளவு குறுகிய காலத்தில் முடிவதற்கு திரைப்படத் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் தான் முக்கிய காரணம்.

நான் முழு கதையும் தெரிந்து கொண்டு தான் படத்தை இயக்குவேன். முதலிலேயே ஒரு காட்சி எடுக்கும்போது இதற்கு இத்தனை சூட் இருந்தால் போதும் என்று நான் முன்னாடியே எனக்குள் எடிட்டிங் செய்து கொள்வேன். நான படம் எடுப்பதற்கு முன்னாடியே ஸ்க்ரிப்ட் போர்டு ரெடி பண்ணிப்பேன். பின் அந்த காட்சி என்ன மாதிரி, எப்படி எடுக்கலாம் என்று முடிவு செய்து தான் படம் ஆக்குவேன். எப்பவுமே ஒரு காட்சி எடுக்கும் போது அதிகமாகவோ, கம்மியாகவோ எட்டுக்க மாட்டேன். சரியாக தேவையான அளவு மட்டும் தான் எடுப்பேன் என்று கூறினார்.

-விளம்பரம்-

இப்படி இயக்குனர் கார்த்திக் நரேன் கூறிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இயக்குனர் கார்த்திக் நரேன்னை பார்த்து திட்டமிடல் செயலை கற்றுக் கொள்ளுங்கள் என்று அட்லிக்கு அறிவுரை கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரி திறமையுள்ள இயக்குனர்களுக்கு பெரிய ஹீரோக்களின் படங்கள் வாய்ப்பு தரலாமே என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Advertisement