அவங்க எலிமினேட் ஆனதுக்கு நான் காரணம் இல்ல, இவரு தான். புலம்பிய மணிமேகலை.

0
2241
cook-with-comali
- Advertisement -

கடந்த வருடம் நவம்பர் மாதம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க சமையல் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் நிஷா தொகுத்து வழங்குக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷன் பட் உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார், தாடி பாலாஜி, நடிகை ரேகா, நடிகை ரம்யா பாண்டியன், பேராசிரியர் கு, ஞானசம்பந்தம், உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இவர்களை டிஸ்டர்ப் செய்ய கோமாளிகள் என்று விஜய் டிவியின் காமெடி, மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள்.இந்த சமையல் நிகழ்ச்சி மற்ற சமையல் நிகழ்ச்சிகளை போல இல்லாமல் ஒரு புது வித்தியாசமான முயற்சியை கொண்டு வந்து உள்ளது விஜய் டிவி. அது சமையல் தெரிந்தவர்களுடன் சமையல் செய்ய தெரியாதவர்கள் இணைந்து செய்யும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. மேலும், ஒவ்வொரு வாரமும் புதுப்புது டிஸ் உடன் போட்டியாளர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லை. அதுவும் ஒவ்வொரு வாரமும் புது நிபந்தனையுடன் போட்டி தொடங்கும்.

- Advertisement -

இதுவரை வந்த சமையல் நிகழ்ச்சியை விட இந்த சமையல் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் விரைவாக பிரபலம் அடைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் யார் வெல்ல போகிறார்கள்? என்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அந்த அளவிற்கு அனைவரும் பிரமாதமாக சமையல் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தொகுப்பாளினி மணிமேகலை தனது ட்விட்டர் பக்கத்தில் குக் வித் கோமாளி குறித்து கருத்து ஒன்று பதிவிட்டு உள்ளார். தற்போது இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்து தற்போது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக பணி புரிந்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

இந்நிலையில் மணிமேகலை குறித்து ரசிகர் ஒருவர் நீங்க செய்த செயல் ரொம்ப பிடிச்சிருக்கு என்று ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அது என்னவென்றால் உமா உடன் இருந்து அவர்களை பைனலுக்கு கொண்டு போனதும் நீங்கள் தான். ரேகா உடன் இருந்து அவர்களை எலிமினேட் பண்ணதும் நீங்கள் தான் என்று கூறி இருந்தார்கள். அதற்கு மணிமேகலை அவர்கள் கூறியது, இறுதி சுற்றுக்கு உமா மேம் போனது ஓகே. ஆனால், ரேகா மேம்மை நான் எலிமினேட் பண்ணல. பாலாஜி அண்ணன் தான் பண்ணாரு. ஆனால், தெரிந்தோ தெரியாமலோ அதுக்கு நான் காரணம் ஆகி விட்டேன் என்று வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement