காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பி வந்த திரிஷா – கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.

0
634
- Advertisement -

தளபதி 67 படத்திற்க்காக காஷ்மீர் சென்ற திரிஷா 3 நாட்களில் வந்திருப்பது சோசியல் மீடியாவில் பேசுபொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு என இரண்டும் ரசிகர்களை திருப்த்தி படுத்த தவறிய நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தான் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றன்ர்.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்காக படக்குழு காஷ்மீர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

காஷ்மீரில் ஷட்டிங் :

இப்படி நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி 67 படக்குழு அனைவரும் காஷ்மீர் சென்றனர். இவர்கள் காஷ்மீர் செல்கையில் படக்குழுவின் பல புகைப்படங்களும், விடீயோக்களும் சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகியது. அதோடு பலரும் படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து ரசிகர்கள் ஒவ்வொரு கதைகளை கூறி வந்தனர். மேலும் பலரும் இந்த கதை லோகேஷ் சினிமெடிக் யூனிவெர்சில் வரும் என்று உறுதியாக கூறி வந்தனர்.

முதல் ப்ரோமோ :

இப்படிப்பட்ட நிலையில் தான் படத்தில் முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியது. அந்த ப்ரோமோவில் காலை காட்சியில் சாக்கலேட் தயாரிக்கும் விஜய் இரவு நேரத்தில் வாழ் ஒன்றை தயாரிக்கிறார். பின்னர் அங்கு பல கார்கள் வருகின்றனர். விஜய் வாழில் உள்ள சாக்கலேட்டை சாப்பிடும் படி அந்த ப்ரோமோ முடிந்தது. மேலும், இந்த படத்திற்கு ‘ leo ‘ என்று தலைப்பு வைத்துள்ளனர். படம் வரும் ஆக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

-விளம்பரம்-

காஸ்மீரில் இருந்து திரும்பி வந்த திரிஷா

இந்நிலையில் விஜய்யுடன் பல வருடங்கள் கழித்து நடிகை திரிஷா இணைந்து நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் இருந்த நிலையில் படக்குழுவுடன் காஷ்மீர் சென்ற திரிஷா மூன்றே நாட்களில் அங்கிருந்து சென்னை வந்துவிட்டார். இவர் சென்னை வந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிங்கர்கள் ஏதோ நடந்திருக்கிறது அதனால் தான் திரிஷா இவ்வளவு விரைவாக சென்னை வந்திருக்கிறார் என்று கூறிவந்தனர்.

கேலி செய்யும் ரசிகர்கள் :

மேலும் பல ரசிகர்கள் மிஷ்கின்தான் திரிஷ்வின் கழுத்தை அறுத்து கொன்று விட்டார் எனவும், கேங்ஸ்டராக இருக்கும் கெளதம் மேனன் நடிகர் மன்சூர் அலிகானிடம் சொல்லி விக்ரம் படத்தில் வந்ததை போல தலையை வெட்டி கதையா முடித்து விட்டார் இதனால் தான் திரிஷா திரும்பி சென்னை வந்துள்ளார் எனவும் கேலி செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் காஷ்மீர் சென்ற மூன்று நாட்களில் மீண்டும் சென்னை வருவதற்கான காரணம் ஒரு வேளை இதுவாக இருக்குமோ என நமக்கே தோன்றுகிறது.

Advertisement