பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக பாத்திமா பாபு குறைவான வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக போட்டியாளர்கள் பற்றிய தனது கருத்தை தெரிவித்தார் பாத்திமா. அதில்,
வனிதா : அவர் தான் சொல்வது தான் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவருடைய குரல் அதிகமாக இருப்பதால் அவர் நிறைய ஆதிக்கம் செலுத்துகிறார். அதனால் அவரிடம் மதுமிதா, லாஸ்லியா, தர்சன் ஆகியோர் நெருக்கம் காண்பிப்பது இல்லை. அதே போல சேரன், சரவணன், சாண்டி ஆகியோர் எதுக்கு வம்புனு விலகிடுறாங்க.
இதையும் பாருங்க : அபிராமியை பற்றி புறம் பேசிய வனிதா அண்ட் கோ.! பச்சோந்தி சாக்க்ஷி.!
அதே போல ரேஷ்மா, சாக்ஷி, அபிராமி ஆகியோர் வனிதாவின் கட்டுபாட்டில் தான் இருக்கிறார்கக்ள், அதில் அபிராமி கொஞ்சம் வெளியில் வந்து விட்டார்.
சாண்டி: அவர் தான் எங்களுக்கும் மக்களுக்கும் என்டர்டைனர்.
சரவணன் : சரவணன் எளிமையான மனிதர். அவர் வாழ்க்கையில் எவ்வளவோ பட்டுள்ளார். அதனால் அவர் பலருக்கும் ஆறுதலாக இருக்கிறார்.
சேரன் : சேரன், தான் ஒரு இயக்குனர் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு தான் இருக்கிறார். அதனால் தன்னுடைய மாறியதை கேட்டு விட கூடாது என்று தெளிவாக இருக்கிறார். எதையும் எதிர்த்து பேசாமல் கையை கட்டுக்கொண்டு வந்து விடுகிறார்.
முகன் : அவருக்கு 24 வயதானாலும் தெளிவான மனநிலை கொண்ட நபர். நெறய தத்துவங்களை சொல்கிறான். 24 வயதில் 42 வயதிற்கான அனுபவங்கள் அவனிடம் இருக்கிறது. அவன் இரண்டு பக்கமும் விசாரித்து நியாயத்தின் பக்கம் நிற்கிறான்.
தர்ஷன் : தர்சன் கண்டிப்பாக இறுதி சுற்றுக்கு வரை வருவான். அது தான் என்னுடைய விருப்புமும், நம்பிக்கையும்.
மோகன் வைத்யா: டக்குனு கத்துறார், டக்குனு அடங்கிடறார். நானும் அவரும் சமையல் செய்து கொண்டிருக்கும் போது அவரிடம் நல்ல விஷயங்களை சொல்லியுள்ளேன். ஆனால், மனசுக்குள்ளே வைத்து கொண்டுள்ளார். ஆனால், அவரும் வனிதாவிடம் தன்னை இணைத்துக்கொள்ள விரும்புகிறார். அவர் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறியுள்ளார்.