சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை. FilmFare 2019 விருதை வென்றவர்களின் முழு லிஸ்ட்.

0
38564
filmfare
- Advertisement -

இந்தியாவில் பாலிவுட் திரைப்படங்களை கவுரவிக்கும் வகையில் வழங்கப்படும் விருது “பிலிம்பேர் விருதுகள்” (Filmfare Awards) . இவை முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு தான் வழங்கப்பட்டது. இது ஆரம்பத்தில் கிளேயார் விருதுகள் என்ற பெயரில் பிலிம்பேர் இதழாசிரியரின் பெயரில் வழங்கப்பட்டு வந்தது. இவ்விருதுகள் எல்லாம் திரைப் படங்களை பொதுமக்களின் வாக்கெடுப்பு, திரைப்பட நிபுணர்களைக் கொண்ட குழுவின் பரிந்துரை மூலம் இரு முறைகளைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதில் மொத்தம் 31 விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது நிகழ்ச்சியில் அனுஷ்கா சர்மா, கிருதி சனோன், கியாரா அத்வானி, ரகுல் ப்ரீத் சிங், ஆலியா பட், சைஃப் அலி கான், வருண் தவான், ஆயுஷ்மான் குரானா என பல நட்சத்திரங்கள் ஒன்றாக நடனமாடினர்.

-விளம்பரம்-

இந்த விருது வழங்கும் விழா வருடம் வருடம் திருவிழா போன்று கோலாகலமாக நடை பெறுகிறது. இந்த வருடம் (2019) நடை பெறும் பிலிம்பேர் விருதுகள் 66வது விருது நிகழ்ச்சி ஆகும். அது மட்டும் இல்லாமல் இது இந்தியாவின் ஆஸ்கர் விருது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு பெருமைக்குரிய விருது ஆகும். மேலும், இந்த விருது தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் படங்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான பிலிம்பேர் விருதுகளில் இடம் பெற்ற தமிழ் படங்களை பற்றி பார்க்கலாம். இதில் சிறந்த தமிழ்ப் படமாக “பரியேறும் பெருமாள்” தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. சிறந்த இயக்குனராக ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இதையும் பாருங்க : அவருக்காக தான் ஆயிஷா 3,550 படி ஏறுனாங்க. பல சுவாரஸ்யங்களை பகிர்ந்த குள்ள பூதம் .

- Advertisement -

சிறந்த நடிகர்க்கான விருதை வடசென்னை படத்திற்காக தனுஷூம், 96 படத்திற்காக விஜய் சேதுபதியும் பெறுகின்றனர். சிறந்த நடிகையாக 96 படத்தில் ஜானு கதாபாத்திரத்தில் நடித்த திரிஷா அவர்கள் விருது பெறுகிறார். சிறந்த துணை நடிகை விருதை சரண்யா பொன்வண்ணன் (கோலமாவு கோகிலா) வாங்குகிறார். சிறந்த நடிகர்- விமர்சகர்கள் பிரிவில் இந்த விருதை அரவிந்தசாமி வாங்குகிறார். சிறந்த குணச்சித்திர நடிகர்களுக்கான விருதுகள் கனா படத்தில் நடித்த சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷூக்கும் வழங்கப்படுகிறது. சிறந்த இசை, சிறந்த பாடல் போன்றவற்றுக்கும் 96 படம் தேர்வாகி உள்ளது. அதோடு 96 படத்திற்கு இசை அமைத்த கோவிந்த வசந்தா இந்த விருதைப் பெறுகிறார்.

சிறந்த பின்னணி பாடகர்களாக சித் ஸ்ரீராம்(ஹேய் பெண்ணே – பியார் பிரேமா காதல்), சின்மயீ( காதலே காதலே – 96) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை ரைசா வில்சன் (பியார் பிரேமா காதல்) பெறுகிறார். சிறந்த நடன இயக்குனருக்கான விருதை பிரபுதேவா, ஜானி ( ரவுடி பேபி) பெறுகிறார். சிறந்த ஒளிப்பதிவாளர்க்கான விருதை ரத்னவேலு (ரங்கஸ்தலம் படம்) பெறுகிறார். ஆக மொத்தம் 16 பிரிவில் தமிழ் மொழி படங்கள் இந்த பிலிம்பேர் விருதுகளை வாங்குகிறார்கள். அதோடு அதிக பிரிவில் விருதுகளை தட்டிச் சென்றது 96 படம். இந்த நிகழ்ச்சிக்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் அதிக ஏதிர்பார்புடன் உள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement