எம்.குமரன் படத்தில் நான் வாங்கிய சம்பளம் – Flash Back பகிர்ந்த விஜய் சேதுபதி.

0
2013
- Advertisement -

ஆரம்ப காலகட்டங்களில் தான் நடித்த திரைப்படம் குறித்து சமீபத்தில் விஜய் சேதுபதி பேசியுள்ளார். சினிமாவில் நுழைந்த குறுகிய நாளிலேயே தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் விஜய் சேதுபதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து உள்ள படம் மாஸ்டர். இந்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், காத்துவாக்குல ரெண்டு காதல், லாபம் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அதோடு இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இவரை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். இவரது நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூல் ஆகி சாதனை படைத்தது வருகிறது. இவர் சினிமாவிற்குள் நுழைய ஆரம்ப கட்டங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். தற்போது இறைவன் திரைப்படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி எம்.குமரன் son of மகாலட்சுமி திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்து பற்றி தற்போது பேசியுள்ளார்.

- Advertisement -

ஜவான் படம்:

இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ்வான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பலரும் இந்த படத்தை பார்த்து அட்லியையும் ஷாருக்கானையும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள். அதிலும் இந்த படத்தை பிகில், மெர்சல், தெறி, சர்தார், துணிவு, ஆரம்பம், மங்காத்தா, கத்தி, சிவாஜி,, ராஜா ராணி, துப்பாக்கி என எல்லா படங்களின் கலவை தான் ஜவான் என்று கூறி இருக்கிறார்கள்.

விஜய் சேதுபத்தி பேசியது:

நான் சினிமாவில் நடிக்க முயற்சி செய்தபோது நான் நடித்த இரண்டாவது படம் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி. அதற்கு முன் ஒரு திரைப்படத்தில் நடித்தேன் அதில் நான் அந்தப் படத்தில் ஹீரோவை பார்க்கவே இல்லை. அதன்பின் நான் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் நடிப்பதற்காக போட்டோவை அளித்து அதன் பின் திரைப்படத்தில் நான் நடித்தேன். நான் முதலில் பார்த்து நடித்த ஹீரோ ஜெயம் ரவி தான். அந்த திரைப்படத்தின் காட்சியானது வடபழனியில் உள்ள ஒரு உடன் உடற்பயிற்சி கூடத்தில் நடைபெற்றது.

-விளம்பரம்-

நான் முதலில் அடுத்த திரைப்படத்திற்கு எனக்கு 250 சம்பளமும் அதன் பின் இந்த இரண்டாவது திரைப்படத்தில் எனக்கு 400 ரூபாய் சம்பளம் உயர்த்தி தரப்பட்டது. உங்களுக்கு இந்த திரைப்படத்தில் ஜிம் பாய் கதாபாத்திரம் என்று ராஜா சார் என்னிடம் கூறினார். எனக்கு அப்போதெல்லாம் ஜிம்பாய் என்றால் என்ன கதாபாத்திரம் என்று தெரியாது. அதில் நதியா மேடம் எனக்கு ஒரு பையன் இருக்கின்றான் அவன் பாக்ஸர் என்று வசனம் மாசாக கூறும் காட்சியில் நான் அங்கு தான் அருகில் நின்று கொண்டிருந்தேன். நான் பார்த்த முதல் ஹீரோ ஜெயம் ரவி தான் என்றும் விஜய் சேதுபதி கூறியிருந்தார்.

Advertisement