பிகிலுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் பூக்கடைகாரர்கள்.. இதுக்கும் காரணம் விஜய் தாங்க..

0
1632
Bigil

விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் நெருங்கி விட்டது என்று கூட சொல்லலாம். தீபாவளிக்கு முன்னாடியே பிகில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை அறிந்து விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்திலும், உற்சாகத்திலும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பிகில் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதில் பல சர்ச்சைகளும், பிரச்சினைகளும் எழுந்த வண்ணம் உள்ளன.பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது தளபதி விஜய் அவர்கள் குட்டி குட்டி கதைகள் சொல்லி இருந்தார். அதில் ஒரு கதையில் பூ கடை பற்றி கூறியிருந்தார்.இதனால் பூ தொழிலார்கள் அனைவரும் விஜய் எங்களை மரியாதை குறைவாக பேசியுள்ளார் என்று கண்டனம் தெரிவித்தனர்.

Image result for bigil

அதோடு விஜய் அவர்கள் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி என்ன குட்டி கதையில் கூறினார் என்று பார்த்தால், ஒரு பையன் பூக்கடையில் தினமும் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். திடீரென்று அவனை தூக்கி பட்டாசு கடையில் வேலை பார்க்க செய்தார்கள். அவன் பூக்கடையில் செய்வதைப்போல பட்டாசு கடையில் உட்கார்ந்து கொண்டு ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை பட்டாசு மீது தண்ணீர் தெளித்து வியாபாரத்தைக் கெடுத்து விட்டான் என்று கூறினார். இந்த பேச்சு அனைத்து பூ தொழிலாளர்களை தரக்குறைவாகவும், மரியாதை குறைவாகவும், அவன், இவன் என்று பேசியது எங்களை புண்படுத்தும் விதமாக உள்ளது என்று ஸ்ரீரங்கம் அண்ணா புஷ்பா தொழிலாளர்கள் சங்க செயலாளர் படையப்பா ரெங்கராஜ் கூறினார்.

இதையும் பாருங்க : பொது நிகழ்ச்சிக்கு படு மெல்லிய உடையில் சென்ற வாணி போஜன்.. ஹீரோயினா ஆகிட்டாங்கயில்ல..

- Advertisement -

மேலும், அவர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறியது, மாவட்டம் தோறும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேலாக தொழிலாளர்கள் பூ தொழில் வியாபாரம் செய்து கொண்டு வருகின்றனர். அது மட்டும் இல்லைங்க பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லாருக்குமே தேவை இந்த புனிதமான பூ தான். அப்படிப்பட்ட பூ வியாபாரம் செய்யும் பூ தொழிலாளர்களை தரைகுறைவாக விஜய் பேசியதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

vijay

அதற்காக அவர் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறியிருந்தார். இது மட்டும் இல்லைங்க சில வாரங்களுக்கு முன்னர் பிகில் போஸ்டரில் இளைய தளபதி விஜய் அவர்கள் கறி வெட்டும் கட்டையின் மீது செருப்பு கால் வைத்து உட்கார்ந்து உள்ளார் என்று கரிகடை சங்கத்தினர் அனைவரும் போஸ்டர் கிழித்து தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார்கள். மேலும், பிகில் படத்தின் போஸ்டர்களை மாற்ற வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டார்கள் இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் .

மேலும், பிகில் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. டிரைலர் வெளியாகி சில நிமிடங்கள் கூட இருக்காது ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் “சக் தே” படத்தை ரீமேக் செய்து உள்ளார்கள் என்று தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து இயக்குனர் கே.பி. செல்வா என்பவர் உயர் நீதிமன்றத்தில் இந்த படம் என்னுடைய கதையில் இருந்து திருடியது என்றும் வழக்கு தொடர்ந்துள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இப்படி இணையதளங்களில் பிகில் படம் குறித்து பல சர்ச்சைகளும் விவாதங்களும் போய்க் கொண்டேதான் இருக்கிறது.முதல்ல சினிமா பிரபலங்களிடம் இருந்து பிரச்சினை வந்தது. இப்ப சிறு தொழில் செய்யும் மக்களிடமிருந்து பிரச்சினை வருகிறது என கூறுகின்றனர் நெட்டிசன்கள். பிகில் படத்திற்கு இன்னும் என்ன, என்ன தான் பிரச்சனை வருமோ? என்று தெரியவில்லை.

Advertisement