தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டாராக திகழ்ந்து வரும் அஜித் பல்வேறு பட வாய்ப்புகளை தவறவிட்டு உள்ளார், அதில் ஒரு சில ஹிட் படங்களும் அடக்கம். மேலும் அஜித், பாலா இயக்கத்தில் நந்தா மற்றும் நான் கடவுள் போன்ற படங்களில் நடிப்பதாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் தற்போது வரை அஜீத் மற்றும் பாலா எந்த படத்திலும் இணையவில்லை. இதில் நான் கடவுள் படம் கைவிடப்பட்டது மிகவும் பெரிய கதை. நான் கடவுள் படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித் கஷ்டப்பட்டு உடலை குறைத்து நீளமான முடியையும் வளர்த்துள்ளார். ஆனால், ஒரு நாள் இந்தப் படத்திலிருந்து அஜித் நீக்கப்பட்டு விட்டார் என்ற செய்தியைக் கேட்டு அவர் மிகவும் அப்செட் அடைந்துள்ளார்.
மேலும், இந்த படத்திற்காக அஜித் ஒரு கோடி ரூபாய் பணத்தை அட்வான்ஸாக பெற்றுள்ளார். ஆனால், அஜித் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டதால் அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்டுள்ளார் பாலா. அஜீத்தும் பல்வேறு வாக்குவாதங்களை பின்னர் அந்த பணத்தை தருவதாகவும் ஒப்புக் கொண்டார். ஆனால், இந்த பணத்தை வட்டிக்கு வாங்கியதாகவும், அதனால் வட்டியுடன் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு பாலா அஜித்திடம் கூறியுள்ளார் பின் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது இறுதியில் அஜித் வட்டி தானே அதையும் கொடுத்து விடுகிறேன் என்று ஒரு கோடி ரூபாய் பணத்துடன் வட்டியும் சேர்த்து கொடுத்துள்ளார். இதுதான் நான் கடவுள் படத்தின் போது பாலாவிற்கு அஜித்திற்கும் நடந்த பிரச்சனை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்காக அஜித் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
அஜீத்துடன் ஏன் படம் பண்ணவில்லை எதனால் நான் கடவுள் படம் கைவிடப்பட்டது என்று பாலா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் அதில் அஜித்துக்கும் எனக்கும் தொழில் ரீதியாக சில முரண்பாடுகள் இருந்தன அதில் சில கருத்து வேறுபாடுகளும் இருந்தது அதை எங்களுக்குள் பேசி தீர்த்துக் கொண்டோம் அது கொஞ்சம் ஏமோஷனல் இருந்திருக்கலாம் ஆனால் அந்த செய்தியை பிரபல பத்திரிக்கை ஒன்றில் சொன்ன விதமும் அதனால் ஏற்பட்டதாகவும் என்னை அதிர்ச்சியடைய வைத்தது நான் முன்பே சொன்ன மாதிரி ஒல்லியாக இருந்ததால் எனக்கு நானே போட்டுக்கொண்ட வேஷம் தான் என்னுடைய மூர்க்கத்தனமும் ஆனால் அந்த பிரபல பத்திரிகையில் வந்த செய்தி வந்தபோது எனக்கு ரவுடி என்ற இமேஜ் வந்துவிட்டது
இதில் எனக்கு மிகவும் வருத்தம். ஆனால், அது கொஞ்ச நேரம் வருத்தம்தான் பரபரப்பாக செய்தி தரும் அந்த பத்திரிக்கையின் உரிமையை உணர்ந்து வருத்தத்தை மாற்றிக் கொண்டேன். அஜித் விஷயத்திலும் தவறு என் மீதுதான். அஜித் என்னை விட நல்லவர் என்று சொல்வதைவிட அஜித் அளவிற்கு நான் நல்லவன் இல்லை என்று சொல்லலாம். அது தான் சரி என்று கூறியிருந்தார் பாலா. அதேபோல அஜித்தை வைத்து படம் எடுப்பீர்களா என்று பாலாவிடம் ஒரு சமயத்தில் கேட்கப்பட்டபோது, இருவரும் இணைவதற்கு இரண்டு முறை முயற்சி செய்தும் நடக்கவில்லை நடக்கும் என்பார் நடக்காது. நடக்காதென்பார் நடந்துவிடும். யார் கண்டது என்று கூறியபடி சிரித்துள்ளார் பாலா.