நல்லது சொன்ன நகுலை திட்டிய நபர். தன் வீடியோவால் நன்மையடைந்த பெண் அனுப்பியதை பதிவிட்டு கொடுத்த பதிலடி.

0
783
nakul
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல்வேறு சகோதர சகோதரி நட்சத்திரங்கள் சினிமாவில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யா – கார்த்தி, ஜீவா – ரமேஷ், அருண் விஜய் – வனிதா, சிம்ரன் – மோனால், நக்மா – ஜோதிகா இப்படி கூறிக்கொண்டே போகலாம், அந்த வகையில் தமிழ் சினிமாவில் தேவையணி மற்றும் நகுலும் ஒரு முக்கிய நட்சத்திர நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். நடிகர் நகுல், தொடக்கத்தில் நடித்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இப்போது வெற்றிக் கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறார். இறுதியாக செய் என்ற படத்தில் நடித்திருந்தார் நகுல். ஆனால், அந்த திரைப்படம் எதிர்பார்த்தபடி வரவேற்பை பெறவில்லை.

-விளம்பரம்-

நடிகர் நகுல் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு பாடகரும் கூட. இதுவரை தமிழில் 9 பாடல்களை பாடியுள்ளார். அந்நியன் படத்தில் வந்த காதல் யானை பாடல் மூலம் நடிகர் நகுல் பாடகராக அறிமுகமானார். இதனால் இவர் பல்வேறு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

இதையும் பாருங்க : நயன்தாராவை கிஸ் அடிக்கும் போட்டோவை கேட்ட ரசிகர் – விக்னேஷ் சிவனின் செம பதில்.

- Advertisement -

திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு அப்பாவானாலும் இன்னமும் பிட்னஸ் விஷயத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார். அடிக்கடி பிட்னஸ் சமந்தப்பட்ட விஷயங்களை பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் ரசிகர் ஒருவர் இன்று நான் உடற்பயிற்சி செய்துவிட்டேன், நீங்கள் செய்தீர்களா என்று கேட்டு இருந்தார். இதற்கு வீடியோ மூலம் பதில் அளித்த நகுல், திருப்பதிக்கே லட்டா, நான் பண்ணல, நீங்க பண்ணீங்களா, பண்ண மாட்டிங்களா என்று கூறி இருந்தார்.

இதற்கு ரசிகர் ஒருவர், உன்வேலைய நீ பாரு, பண்ணுவியா, பண்ணமாட்டியா ச்சீ என்று கமன்ட் செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பெண் ஒருவர் உடற் பயிற்சி செய்து உடல் எடையை குறைத்ததால் கற்பமானதாகவும், உடற் பயிற்சி செய்வதை நீங்கள் தினமும் நினைவுபடுத்தியதற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிலை தன்னை கேலி செய்தவருக்கு பதிலடியாக கொடுத்துள்ளார் நகுல்.

-விளம்பரம்-
Advertisement