தன்னுடைய அக்கா மகளுக்கு சிம்பு உதவினால் கூல் சுரேஷ் செய்ததை விட அதிகமாக சிம்புவிற்கு குரல் கொடுப்பேன் என்று விஜயலட்சுமி பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது.
நீண்ட இடைவெளிக்கு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தில் சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி படத்தில் பல நடிகர்கள் நடித்து இருக்கிறர்கள்.
வெந்து தணிந்தது காடு படம்:
இந்த படத்தை ஐசரி கனேசன் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறது. காதல், கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. திரைப் பிரபலங்கள் பலரும் சிம்புவின் படத்தை பார்த்து பாராட்டி இருந்தார்கள். மேலும், படம் வெளியாகி நல்ல வசூல் செய்து இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
கூல் சுரேஷ் செய்த செயல்:
இது ஒரு பக்கம் இருக்க, இந்த படத்தின் ப்ரோமோஷனை கடந்த ஒரு வருடமாக பட்டித் தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தவர் கூல் சுரேஷ். இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தமிழ் சினிமா உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் கூல் சுரேஷ். இவர் சிம்புவின் தீவிர ரசிகர். வெந்து தணிந்தது காடு படம் வெளியான பிறகு கூல் சுரேஷுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏக போக வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
விஜயலக்ஷ்மி பதிவிட்ட பதிவு:
அதுமட்டுமில்லாமல் சிம்புவும், படக்குழுவினரும் கூல் சுரேஷுக்கு நன்றி தெரிவித்து பாராட்டி இருந்தார்கள். இது குறித்து சமீபத்தில் கூல் சுரேஷ் சிம்புவிற்கு நன்றி தெரிவித்து கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் கூல் சுரேஷ் வீடியோவை குறிப்பிட்டு நடிகர் விஜயலட்சுமி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், என்னுடைய அக்கா மகள் சிம்பு வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் இருக்கிறார்.
விஜயலக்ஷ்மி வைத்த கோரிக்கை:
அவருக்கு உதவி செய்தால் கூல் சுரேசை விட அதிகமாக சிம்புவிற்காக நான் குரல் கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார். ஏனென்றால், விஜயலட்சுமியின் அக்காவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தன்னுடைய மகளை கவனிக்க இயலவில்லை. இதனால் சிம்பு வீட்டிற்கு அருகில் உள்ள ஜெயப்பிரதாவின் வீட்டில் அவருடைய மகள் இருக்கிறார். அவருக்கு சிம்பு உதவி செய்ய வேண்டும் கூறியிருக்கிறார். இப்படி விஜயலட்சுமி பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.