சமீப காலமாகவே சோசியல் மீடியா அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இன்ஸ்டாகிராம் பிரபலம் அடைவதற்கு 2K கிட்ஸ் தான் காரணம் என்று சொல்லலாம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் Ttf எனப்படும் யூடுயூப் பைக் ரேசருக்கு குவிந்த கூட்டத்தை கண்டு 90ஸ் கிட்ஸ்களை ஆச்சரியத்தால் ஆழ்த்தியது. அந்த வகையில் 2K கிட்ஸ்களின் பேவரட்டாக திகழ்பவர் அமலா ஷாஜி. பிரபல நடிகைகளை விட சோசியல் மீடியாவில் அதிக பாலோவர்ஸ் வைத்து இருக்கிறார் அமலா ஷாஜி. இந்நிலையில் இவரைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக பிரியங்கா மோகன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் சூர்யா, சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்துவிட்டார். இவருக்கு இன்னும் பல பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இப்படி இருந்தும் இவரைவிட சோசியல் மீடியாவில் அமலா ஷாஜியை தான் ரசிகர்கள் அதிகம் பாலோ செய்கிறார்கள். பிரியங்கா மோகன் மட்டுமில்லாமல் ஐஸ்வர்யா மேனன், அதுல்யா ரவி என பல நடிகைகளை விட இன்ஸ்டாவில் அமலா ஷாஜியை ரசிகர்கள் அதிகம் பாலோ செய்கிறார்கள்.
அதற்கு காரணம் இவருடைய கியூட்னஸ் ஓவர்லோடு தான். இவர் சேர்ந்தவர். டிக் டாக்கின் மூலம் அமலா ஷாஜி மக்கள் மத்தியில் அறிமுகமானார். ஆனால், டிக் டாக் தடை செய்யப்பட்டவுடன் இவர் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டார். தற்போது இவரை மில்லியன் கணக்கான பாலோவர்ஸ் பாலோ செய்கிறார்கள். காலையில் முழிப்பதே அமலா ஷாஜியின் முகத்தில் தான் என்று சொல்லலாம். பின் இன்ஸ்டாகிராம், மோஜ், யூடியூபில் இவருடைய வீடியோக்கள் எல்லாம் கொடிகட்டி பறக்கிறது.
அதிலும் இவருடைய ஆட்டம், பாட்டம் என தரமான கன்டென்ட்களை உருவாக்கி தருகிறார். இப்போது வரை அது தான் அவருடைய ஸ்டைல். கற்பூரம் போல் ட்ரெண்டிங் ரீல்ஸ்களை கப் என்று பிடித்து வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார். இதனால் இவருக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள். இவர் தன்னுடைய சகோதரி சேர்ந்து செய்யும் ரில்ஸ், சோலோ டான்ஸ், ரீகிரியேஷன், அம்மா அப்பாவுடன் ஃபேமிலி ரில்ஸ், பண்டிகைகளில் புதிய ஆடைகள், கடை விளம்பரம் என புது புது கான்சப்ட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அதிலும் அமலா ஷாஜியின் வசனம் ‘அழுக ஒன்னும் வேணாம் ஓகே’ என்பதுதான். ஏன்னா, சமீபத்தில் வெளியான இவருடைய வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஆனந்தத்தில் கண்கலங்கினார். அப்போது அமலா இந்த வசனத்தை சொல்லியிருந்தார். இந்த வீடியோ செம வைரலானது. அதிலிருந்து ரசிகர்கள் இவருடைய வசனத்தை தாரக மந்திரமாகவே வைத்துவிட்டார்கள். இவருக்கு கேரளாவில் மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுவும் தமிழ் ரசிகர்கள் இவருக்கு எக்கச்சக்கம் என்றே சொல்லலாம்.
இப்படி சோசியல் மீடியா மூலம் பிரபலமான அமலா ஷாஜிக்கு வெறும் 20 வயது தான் ஆகிறது. மேலும், கூகிளிலும் அமலா ஷாஜியை பற்றிய தேடல்தான் அதிகமாக இருக்கிறது. Amala Shaji என்ற பெயரில் இவர் யூடியூப் சேனல் தொடங்கிய அதில் அதிகாரப்பூர்வமாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இப்படி ஒரு ரீல்ஸ் செய்யும் பெண்ணுக்கு இவ்வளவு ரசிகர்கள் உருவாகுவார்கள் என்று யாராவது சொன்னால் நம்புவார்களா? கூடிய விரைவில் இவரை வெள்ளித்திரையில் பார்க்கலாம்.