ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பார்த்திபன்- காவியாவை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் தொடர் தான் ஈரமான ரோஜாவே 2. ஏற்கனவே, ஈரமான ரோஜாவே சீரியலின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது வித்தியாசமான கதைக்களத்துடன் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்பி வருகிறார்கள்.
இதில் திரவியம், சித்தார்த், கேப்ரில்லா, ஸ்வாதி என பல நடிகர்கள் நடிக்கிறர்கள். இந்த தொடரும் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை பல திருப்பங்களுடன்,விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் பார்த்தி, ஜீவா இருவரும் அண்ணன், தம்பி. அதேபோல் பிரியா, காவ்யா இருவரும் அக்கா, தங்கை. இதில் காவ்யா-ஜீவா இருவரும் காதலித்து இருந்தார்கள். ஆனால், விதி செய்த வலியால் பார்த்தி- காவியாவையும், ஜீவா-ப்ரியாவையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். சீரியலில் ஜோடி மாறி திருமணம் ஆன பிறகு பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
ஈரமான ரோஜாவே 2 சீரியல்:
தற்போது சீரியலில் ஜீவா- காவ்யா காதலித்த உண்மை வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இதனால் மணமுடைந்த ப்ரியா வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஜீவா எவ்வளவோ பிரியாவை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால், பிரியா ஜீவாவை ஏற்றுக் கொள்ளாமல் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் பார்த்திபன், காவியா காதலித்தது தவறில்லை தன்னிடம் மறைத்தது தான் தவறு என்று நினைத்துக் கொண்டு அவரை விட்டு விலக நினைக்கிறார். ஆனால், எல்லாவற்றையும் மறந்து பார்த்திபனை காதலிக்கும் காவியாவிற்கு அவர் கொடுத்த பதில் பேர அதிர்ச்சியாக இருக்கிறது.
கேப்ரில்லா குறித்த தகவல்:
இப்படி நான்கு பேருமே நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள். இனி வரும் காலங்களில் இவர்கள் இடையே இருக்கும் பிரச்சனை தீர்ந்துவிடுமா? என்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் காவியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கேப்ரில்லா. இவர் சின்னத்திரையில் மிகப் பிரபலமானவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. இவருக்கு சிறு வயதில் இருந்தே நடனத்தில் அதிகம் ஆர்வம். இதனால் இவர் ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டத்தையும் வென்று இருந்தார்.
சித்தார்த் குறித்த தகவல்:
பின் இவருக்கு சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் வர பிசியாக நடித்து கொண்டு இருந்தார். சின்னத்திரை பிரபலத்தினால் கேப்ரில்லாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்தும் கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது. தற்போது இவர் ஈரமான ரோஜாவே 2வில் நடித்து வருகிறார். அதேபோல் இந்த சீரியலில் பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்தார்த். இவர் சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் சிறந்த டான்ஸரும் ஆவார்.
விமர்சிக்கும் நெட்டிசன்கள்:
இப்படி பலரும் பார்த்தி- காவியா ஜோடி குறித்து பாராட்டி வரும் நிலையில் இவர்களுடைய சிறு வயது புகைப்படம் பதிவு சோசியல் மீடியாவில் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, பத்து வருடத்திற்கு முன்பு கேப்ரில்லா- சித்தார்த் புகைப்படத்தை ஒன்றாக இணைத்தும், தற்போது இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கிறார்கள். 10 வருடத்திற்கு முன்பு இருவரும் அப்பா பொண்ணு போல இருக்கிறார்கள் தற்போது ஜோடியாக சீரியல் நடிக்கிறார்களே என்று கிண்டல் கேலி செய்து வருகிறார்கள்.