சசிகுமார் கண்டுபிடிப்பு, பிரபல நடிகரின் மகன்-கருடன் படத்தில் நடித்த இவர் யார் தெரியுமா?

0
187
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூரி. இவர் காமெடி நடிகராக மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி விடுதலை படத்தின் மூலம் தான் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் கருடன். இந்த படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், மைம் கோபி, ஆர் வி உதயகுமார், ஷிவிதா நாயர், ரோஷினி, பிரகிடா, ரேவதி ஷர்மா, சமுத்திரகனி, மொட்டை ராஜேந்திரன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி இருக்கிறார். படத்தில் ஒரு கிராமத்தில் அமைச்சர் ஒருவர் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை தனக்கு சொந்தமாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார். அந்த இடத்தின் உடைய மூல பத்திரம் கோயில் டிரஸ்ட் இடம் இருக்கிறது. அவர் அந்தப் பத்திரத்தை எப்படியாவது கைப்பற்றி தன்வசம் ஆக்க பல திட்டங்கள் போடுகிறார். இன்னொரு பக்கம் அதே ஊரில் சசிகுமார், உன்னி முகுந்தன் என இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -

கருடன் படம்:

இருவருமே இணைபிரியாத நட்புடன் இருக்கிறார்கள். உன்னியின் நிழலாகவும், அவருக்கு விசுவாசமாக இருப்பவர் தான் சொக்கன் சூரி. மேலும், அமைச்சர் போடும் திட்டத்தை இந்த இரண்டு நண்பர்கள் முறி அடித்தார்களா? இதில் சூரியின் பங்கு என்ன? அமைச்சர் ஏன் அந்த நிலத்தை அடையப் பார்க்கிறார்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் சூரி, சொக்கன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம்.

படம் குறித்த தகவல்:துஷ்யந்த் பேட்டி:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் சாதனையும் செய்து வருகிறது. மேலும், இந்த படத்தில் நடிகை ரோஷினி பிரியதர்ஷினியின் சகோதரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் துஷ்யந்த். இவர் ஏற்கனவே சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி இருந்த ஈசன் என்ற படத்தில் நடிகை அபிநயாவின் தம்பியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவர் ரசிகர்களின் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

-விளம்பரம்-

துஷ்யந்த் பேட்டி:

அதற்குப் பிறகு இவருடைய நடிப்பில் பெரிதாக படங்கள் வெளியாகவில்லை. நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் கருடன் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் வேறு யாரும் இல்லை, பிரபல நடிகர் ஜெயபிரகாஷின் மகன். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் துஷ்யந்த், கருடன் படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னிடம் துரை செந்தில்குமார் சார், படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரம் இருக்கு செய்கிறீர்களா? என்று கேட்டார்.

படம் அனுபவம்:

சசிகுமார்,சூரி இருக்கிறார்கள் என்பதால் நெகட்டிவ் ரோலாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஓகே சொல்லிவிட்டேன். அதோட நான் நகரத்தில் வளர்ந்ததால் கிராமத்து வட்டார வழக்கு எனக்கு வரவில்லை. எனக்கு நடிக்க ரொம்ப கஷ்டமாக இருந்தது. இதை கவனித்த சசிக்குமார் தனியாக அழைத்து என்னுடைய பயத்தை போக்கினார். மேலும், நான் ஈசன் படத்தில் சமுத்திரக்கனி உடன் சேர்ந்து நடித்து இருந்தேன். ஆனால், கருடன் படத்தில் எனக்கும் அவருக்கும் காட்சிகள் இல்லை. சூட்டிங் ஸ்பாட்டில் என்னை பார்த்தவுடன் என்னடா இப்படி வளர்ந்ததுட்டா என்று ஆச்சரியத்துடன் கேட்டார். ’14 வருடம் ஆகிவிட்டது சார்’ என்று நான் சொல்ல, பல விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்.

Advertisement