‘ஆடுகளம்’ படத்தில் தனுஷுக்கு தேசிய விருது ஏன்? – கெளதம் மேனன் சொன்ன காரணம்.

0
229
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமான ஒரு இயக்குனராக திகழ்ந்து வருகிறார் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதிலும் தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் தனுஷை வைத்து இயக்கிய படங்களில் ஒன்று தான் ஆடுகளம்.

-விளம்பரம்-

இந்த படம் 2011 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் டாப்ஸி தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் சேவல் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் வசூலையும் பெற்று இருந்தது. அதோடு அந்த ஆண்டு வழங்கப்பட தேசிய விருதுகளில் சிறந்த இயக்குனர், சிறந்த கதை, சிறந்த நடிகர் போன்ற ஆறு பிரிவுகளின் கீழ் ஆடுகளம் படம் வாங்கி இருந்தது.

- Advertisement -

கௌதம் மேனன் பேட்டி:

இந்த நிலையில் இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் கௌதம் மேனன், ஆடுகளம் படத்தில் இடம்பெற்ற ஒத்த சொல்லாலே பாடலில் தனுஷ் தெருவில் இறங்கி டான்ஸ் ஆடியதற்காக தான் நாங்கள் அவருக்கு நேஷனல் அவார்ட் கொடுத்தோம் என்று இசையமைப்பாளர் பரத்வாஜ் சொல்லி இருந்தார். அதுதான் ஒரு பெர்ஃபார்மர். அவ்வளவு சீக்கிரம் யாரும் அப்படி இறங்கி நடிக்க மாட்டார்கள். நடுத்தெருவில் நின்று கொண்டு லுங்கி தூக்கி ஆடுவது மாதிரி டான்ஸ் ஆட மாட்டார்கள்.

தேசிய விருது குறித்து சொன்னது:

அந்த வருடத்தில் தனுஷ் நடிப்பு வித்தியாசமாக இருந்ததால் தான் அவருக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது. எனக்கு அது போன்ற ஒரு பர்பாமன்ஸ் தான் வேணும். பார்வையாளர்களை வாய்ப்பிழக்க வைப்பது என்பது ஃபுல்லா மேக்கப் போட்டுக்கிட்டு வந்து பல கதாபாத்திரத்தில் நடிப்பது இல்லை. பெர்ஃபார்மன்ஸ் இறங்கி செய்ய வேண்டும். தனுஷ் அந்த மாதிரி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக செய்யக்கூடியவர்.

-விளம்பரம்-

தனுஷ் குறித்து சொன்னது:

அப்படி ஒரு கதாபாத்திரம் தான் அசுரன் படத்தில் சிவசாமி கதாபாத்திரம். அந்தப்படத்திலும் அவருடைய நடிப்பு சிறப்பாக இருந்தது இதனால் இரண்டாவது முறையாகவும் அவருக்கு தேசிய விருது கிடைத்திருந்தது என்று கூறியிருந்தார். மேலும், கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வந்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் இயக்குனர் கௌதம் மேனனும் ஒருவர். இவர் இயக்கிய பல்வேறு திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்திருக்கிறது.

கௌதம் மேனன் திரைப்பயணம்:

அதிலும் போலீஸ் ஸ்டோரி ஹிட் நிச்சயம் ஹிட் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், சமீபகாலமாக இவர் இயக்கிய எந்த படங்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இயக்குனர் கெளதம் மேனனை விட நடிகர் கெளதம் மேனனை தான் அதிகம் பேருக்கு பிடிக்கும். அதிலும் குறிப்பாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. இதனால் இவர் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement