லோகேஷ் Vs கெளதம் மேனன் – யார் உண்மையான Fan Boy – VTK கிளைமாக்ஸ் குறித்து லோகேஷ் சொன்ன பதில்.

0
263
lokesh
- Advertisement -

கமலின் fanboy குறித்து லோகேஷ்-கௌதம் மேனன் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தில் சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறர்கள். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறது. படத்தில் சிம்பு அவர்கள் தன்னுடைய அம்மா, தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். இவர் வயகாட்டில் வேலை செய்து தன்னுடைய குடும்பத்தை பாதுகாத்து வருகிறார். அப்போது ஒரு நாள் வயகாட்டில் வேலை செய்யும் போது சிம்புவுக்கு விபத்து ஏற்படுகிறது.

- Advertisement -

வெந்து தணிந்தது காடு படம்:

இதை நினைத்து அவருடைய தாய் பயப்படுகிறார். பின் உறவினர் மூலம் சிம்புவை வேறு ஒரு வேலைக்கு அனுப்ப முயற்சி செய்கிறார். பின் சிம்பு மும்பைக்கு செல்கிறார். அங்கு எதிர்பாராத விதமாக கேங்ஸ்டர் கும்பலில் சிம்பு சிக்கி கொள்கிறார். இறுதியில் சிம்புவின் வாழ்க்கை என்ன ஆனது? சொந்த ஊருக்கே சிம்பு திரும்பினாரா? என்பது தான் படத்தின் மீதி. காதல், கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது.

படத்தின் விமர்சனம்:

நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. திரைப் பிரபலங்கள் பலரும் சிம்புவின் படத்தை பாராட்டி வருகிறார்கள். மேலும், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கமலஹாசனின் நாயகன் படத்தின் புகைப்படத்தை வைத்தும், அந்த படத்தில் வந்த ஐயர் கதாபாத்திரத்தை வைத்திருப்பார் இயக்குனர். இது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து லோகேஷ் கனகராஜ் இடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

லோகேஷ் அளித்த பேட்டி:

அதற்கு லோகேஷ் கனகராஜ், நான் இன்னும் படம் பார்க்கவில்லை. பலரும் படத்தை பார்த்து பாராட்டி இருந்தார்கள். படத்தின் குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். என்னை போல் கௌதம் மேனன் சாரும் கமலஹாசனின் ஃபேன் பாய் அதனால் வைத்து இருக்கலாம் என்று கூறி இருக்கிறார். கௌதம் மேனன் கமலஹாசனின் ஃபேன் பாய் என்பது பலரும் அறிந்த ஒன்றுதான். இதனால இவர் வேட்டையாடு விளையாடு படத்தை கமலஹாசனை வைத்து எடுத்திருந்தார். அதேபோல் லோகேஷ் கனகராஜ் கமலஹாசனின் ஃபேன் பாய் தான்.

கவுதம் மேனன் அளித்த பேட்டி:

அதனால் விக்ரம் படத்தை எடுத்தார். ஆனால், விக்ரம் படம் பேசப்பட்ட அளவுக்கு வேட்டையாடு விளையாடு படம் பேசப்படவில்லை. இதனால் லோகேஷ் தான் ஒரிஜினல் ஃபேன் பாய் என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் கௌதம் மேனன் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில் கௌதம் மேனன், நான்தான் கமலஹாசனின் ஒரிஜினல் ஃபேன் பாய். அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. சண்டையின்னு வந்தால் சட்டை கிளிய தான் செய்யும். நான் அதுக்கும் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசியிருந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement