‘லீக்கான திருச்சி சூர்யா ஆடியோ விவகாரம்’ – கட்சியில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி, அண்ணாமலை அதிரடி. என்ன காரணம் ?

0
611
annamalai
- Advertisement -

பாஜக உறுப்பினர் காயத்ரி ரகுராமை 6 மாதங்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை சஸ்பெண்ட் செய்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் காயத்ரி ரகுராம். இவர் நடன இயக்குனரும் ஆவார். இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டரின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தனது 14 வயதில் இருந்தே சினிமா துறையில் இருந்து வருகிறார். மேலும், இவர் 2002 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் பிரபு நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். இருந்தாலும், பெரிய அளவில் படங்கள் எல்லாம் கைக்கொடுக்கவில்லை. பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் இவரை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்.

- Advertisement -

பிஜேபி காயத்ரி ரகுராம்:

ஆனால், காயத்ரி அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை. அதோடு, வயதும் உடல் எடையும் கூடியதால் இவர் சினிமாவில் நுழைந்த சிறிது காலத்திலேயே கதாநாயகி வாய்ப்பு கைநழுவி போனது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பிஜேபி கட்சியில் இணைந்தார். மேலும், தமிழகத்தின் பிஜேபி உறுப்பினராக இருந்து காயத்ரி பிரச்சாரம் செய்து வருகிறார். இதனால் இவர் பல சர்ச்சைகளில் சிக்கிருக்கிறார். அதுவும் கடந்த சில மாதங்களாக பாஜகவில் நடக்கும் உட்கட்சி பூசல் தற்போது வெட்ட வெளிச்சமாக இருக்கிறது.

புதிய நிர்வாகிகளின் பட்டியல்:

கடந்த மே மாதம் பாஜகவில் புதிய நிர்வாகிகள் பல பேர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். புதிய நிர்வாகிகளின் பட்டியலை மாநில தலைவர் அண்ணாமலை தான் தேர்வு செய்து வெளியிட்டு இருந்தார். அதில் கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவர் பொறுப்பில் இருந்த காயத்ரி பெயரை நீக்கப்பட்டு இருந்தார். இதனை அடுத்து அந்த பதவிக்கு பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டார். மேலும், தன்னுடைய பதவி பறிக்கப்பட்டது குறித்து காயத்ரி ரகுராம் தொடர்ந்து ட்விட்டரில் பதிவுகளை பதிவிட்டிருந்தார். இவர் பதிவிட்ட ட்விட்டர் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் சர்ச்சையாக இருந்தது.

-விளம்பரம்-

காயத்ரி டீவ்ட்:

பின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் தேர்வு செய்யப்பட்டார். இதனால் அண்ணாமலைக்கு காயத்ரி நன்றி தெரிவித்தார். அது மட்டும் இல்லாமல் இந்த பொறுப்பில் சிறப்பாக தொடர்ந்து செயல்படுவேன் என்றும் கூறியிருந்தார். இதற்கிடையில் காயத்ரி பெயரை குறிப்பிடாமல் பாஜக ஐடியை பதிவிட்டு காயத்ரியை விமர்சித்தும், அவருடைய தொழிலை விமர்சித்தும் பதிவு ஒன்று வெளியாகியிருந்தது. இதற்கு துணைத் தலைவர் செல்வகுமார் லைக் செய்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காயத்ரியும் டீவ்ட் போட்டிருந்தார்.

திருச்சி சிவா ஆடியோ :

அதே போல சமீபத்தில் திருச்சி சிவா பா ஜ கவில் சமீபத்தில் சேர்ந்த சரணை போனில் தொடர்பு கொண்டு படு ஆபாசமாக பேசிய ஆடியோ ஒன்று லீக் ஆனது. இந்த ஆடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த காயத்ரி ரகுராம் ”பெண்களை குறிவைத்து தவறாக பேசினால் நாக்கு வெட்டப்படும் என உறுதியளித்துள்ளார். இப்படிப்பட்ட சமயங்களில் சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு என்றும் பதிவிட்டு இருந்தார்.

அண்ணாமலை அறிக்கை :

இந்த நிலையில் பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராமை சஸ்பெண்ட் செய்து அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். ஆகவே, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தார்.

Advertisement