ராபர்ட் வெளியே போகணும், அதுக்கு பதில் கனவுகளுடன் வந்து இருக்கும் இந்த இருவர் தொடரட்டும் – ரச்சிதா கணவர் தினேஷ் பதிவு.

0
381
- Advertisement -

ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போகணும் என்று ரக்ஷிதா கணவர் தினேஷ் பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி ஒன்றரை மாதங்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
robert

பின் முதல் வைல்ட் கார்டு எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான சில முகங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகம் தான். ராபர்ட் மாஸ்டரை பற்றி வெளியில் தெரிவதற்கு அதிக காரணமாக இருந்தது வனிதா விஷயத்தில் தான்.

- Advertisement -

ராபர்ட் மாஸ்டர் குறித்த தகவல்:

இருவரும் காதலித்து வந்த நிலையில் வனிதாவின் பெயரை கூட தன் கையில் டாட்டூவாக குத்தி இருந்தார் ராபர்ட் மாஸ்டர். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். இந்த நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து ராபர்ட் மாஸ்டருக்கு ரக்ஷிதாவின் மீது ஒரு கண் வைத்து இருக்கிறார். காதலுக்கு வயது இல்லை என்று சொல்லி கொண்டு அவர் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை. இவர், எனக்கு கேர்ள் பிரென்ட் இல்லை. அதனால் நம்முடைய நட்பு வெளியில் போயும் தொடர வேண்டும் என்றெல்லாம் ரக்ஷிதாவிடம் கூறியிருந்தார்.

ராபர்ட் மாஸ்டர்-ரக்ஷிதா:

பின் ரக்ஷிதா என்ன செய்தாலுமே அதை மாஸ்டர் ரசித்துக் கொண்டே இருக்கிறார். ரக்ஷிதா எங்கு சென்றாலும் அவர் பின்னே தொடர்கிறார். ஆனால், ரக்ஷிதா அதை கண்டுகொள்ளாமல் தன்னுடைய விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு கட்டத்திற்கு மேல் சென்று ராபர்ட் மாஸ்டர், ரக்ஷிதா கையை வலுக்கட்டாயமாக பிடித்திருக்கிறார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருந்தது. இதற்கு கூட சமீபத்தில் ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், ரக்ஷிதா நிகழ்ச்சியில் அழகாகத்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

தினேஷ் அளித்த பேட்டி:

அந்த வீட்டுக்குள்ளேயும், வெளியிலேயும் அவங்களை தொடர்பு படுத்தி பேசுகிற விஷயங்களை கேட்டால் சிரிப்புதான் வருகிறது. ஆனால், ராபர்ட் மாஸ்டர் சில விஷயங்கள் தவிர்க்கலாம் என்பது போல தான் இருக்கிறது. மத்தபடி ரக்ஷிதா நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறார். ராபர்ட் மாஸ்டரை, மைனா தான் தூண்டி விடுவது போல இருக்கிறது. இவர்கள் இருவரும் வெளியே சென்றால் ரக்ஷிதா இறுதிவரை செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருந்தார்.

தினேஷ் போஸ்ட்:

இப்படி அடிக்கடி ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் பிக் பாஸ் குறித்து பேட்டி அளித்து வருகிறார். இந்த நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் இரண்டு பதிவு போட்டிருக்கிறார். அதில் முதல் பதிவில், ரக்ஷிதா, ராபர்ட் மாஸ்டரை நாமினேட் செய்யும் வீடியோவை பகிர்ந்து இந்த வீடியோவை பார்த்தால் எனக்கு சிரிப்பாகத் தான் இருக்கிறது என்று கூறியிருந்தார். இரண்டாவது பதிவில், சினிமாவில் பல வாய்ப்புகளை கோட்டை விட்ட ராபர்ட்டுக்கு இது இரண்டாவது இன்னிங்ஸ். அதையும் கோட்டை விட்ட ராபர்ட் எலிமினேட் ஆவது தான் சரி தான். ராம் மற்றும் மணிகண்டன் பல கனவுகளுடன் இந்த பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஓட்டு போட்டு காப்பாற்றுவது தான் எனக்கு சரியாகப்படுகிறது. அவர்களின் கனவுகள் வெற்றி பெற வழி செய்வோம் என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement