எதிர் நீச்சல் தொடரில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகையின் மகள் – அட, இவர் விஜய்க்கு அம்மாவா நடிச்சவராச்சே

0
452
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலில் கில்லி பட நடிகை என்ட்ரி கொடுக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் என்றால் அது எதிர்நீச்சல் தான். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள்.This image has an empty alt attribute; its file name is image-9.png

-விளம்பரம்-

இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். சில மாதங்களாகவே சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம், வீட்டு பெண்கள் எல்லோரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார்கள். இதை அறிந்து குணசேகரன் கோபப்படுகிறார். பின் இவர்களுக்கு உறுதுணையாக இருந்த அப்பத்தா இறந்து விடுவதைப் போல காண்பிக்கிறார்கள். இன்னொரு பக்கம், ஜீவானந்தத்தை போலீஸ் கைது செய்து விடுகிறார்கள்.

குணசேகரன்- ஈஸ்வரி தேர்தல்:

பின் சேர்மன் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில் குணசேகரன்- ஈஸ்வரி இருவரும் எதிர் எதிரே நிற்கிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் ஆதிரை தாலியை கழற்றி போட்டு அருண் வீட்டிற்கு சென்று விடுகிறார். உடனே குணசேகரன் என்னுடைய மகள் தர்ஷினியை உன் மகனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன் என்று ஜான்சி ராணியிடம் சொல்கிறார். இன்னொரு பக்கம், ஜனனிக்கு மெய்யப்பன் குடும்பத்தால் பல பிரச்சனைகள் காத்து கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

சீரியல் டி ஆர் பி ரேட்டிங்:

தற்போது சீரியலில் தேர்தல் பிரச்சாரம் குறித்து எபிசோடுகள் தான் சென்று கொண்டிருக்கின்றது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தெரியவில்லை? இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில வாரங்களாகவே சீரியல் டி ஆர் பி ரேட்டிங்கில் பின்தங்கி இருக்கிறது. தொடர்ந்து மூன்றாவது, நான்காவது இடத்தை தான் பிடித்துக் கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்த சீரியல் டிஆர்பி யில் முதல், இரண்டு இடத்தை தான் பிடித்திருந்தது. சில மாதங்களுக்கு முன் நடிகர் மாரிமுத்து இறப்பிற்குப் பிறகு சீரியல் டிஆர்பி குறைய தொடங்கியது. இந்த வாரம் டிஆர்பி ரேட்ங்கில் எதிர்நீச்சல் சீரியல் ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறது.

சண்முக சுந்தரி

சீரியலில் புது என்ட்ரி:

இந்த நிலையில் சீரியலில் அதிக கவனம் செலுத்தி முன்னிலையில் கொண்டு வர இயக்குனர் திருசெல்வம் புது முயற்சியை கையாண்டு இருக்கிறார். அதாவது கில்லி படத்தில் பிரகாஷ்ராஜின் அம்மாவாக நடித்த பின்னணி பாடகியும், நடிகையுமான கேடி கலாவை களம் இறக்கி விட்டிருக்கிறார். இவர் குருவி படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்து இருக்கிறார். இவர் பிரபல நடிகை சண்முக சுந்தரி மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஐ படத்தில் தான் நடித்திருந்தார். அதற்கு பிறகு இவர் நடிக்கவில்லை. தற்போது எதிர்நீச்சல் சீரியலின் மூலம் மீண்டும் களமிறக இருக்கிறார். இதன் மூலம் எதிர்நீச்சல் சீரியல் மீண்டும் தன்னுடைய இடத்தை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement