தென்னிந்திய சினிமா உலகில் திரைப் படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகை ஜானகி சபேஷ் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். இவர் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித், சூர்யா போன்ற பல நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார். தற்போது நியூஸ் என்ன என்றால் சமூக வலைத்தளங்களில் ஜானகி சபபேசின் மகளின் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். நடிகை ஜானகி சபேஷ் அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடித்து அசத்தி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் திரை உலகில் அம்மா கதாபாத்திரம் என்றாலே இவருக்குத் தான் கொடுக்க வேண்டும் என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு இவர் திறமையாகவும், இயல்பாகவும் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பவர்.
நடிகை ஜானகி சபேஷ் அவர்கள் ஜீன்ஸ், குஷி, ஜோடி, ஐயன், வேட்டையாடு விளையாடு, சிங்கம்-1,2 உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர(அம்மா) நடிகையாக நடித்து உ ள்ளார். இவர் மக்களிடையே பிரபலமானது விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி படத்தின் மூலம் தான். இவருடைய நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதிலும் தற்போது வரை நீங்கா இடம் பிடித்து உள்ளார். மேலும், இவர் படங்களில் நடிக்கும் அம்மா கதாபாத்திரம் எல்லாமே குறும்பு செய்யும் பசங்களுக்கு சப்போர்ட் செய்யும் வெள்ளந்தியான, வெகுளியான அம்மா ரோலில் தான் நடித்து உள்ளார். இதனாலேயே இவர் இளைஞர்கள் மத்தியில் சீக்கிரம் இடம் பிடித்தார் என்றும் சொல்லலாம்.
இதையும் பாருங்க : முதன் முறையாக தனது விவகாரத்து குறித்து பேசிய விஷ்ணு விஷால். இதான் காரணமாம்.
உதாரணத்திற்கு பார்த்தால் தளபதி விஜய்யின் கில்லி படத்தில் குறும்புகார மகனுக்கு வெகுளியான அம்மா கதாபாத்திரம். அதோடு படத்தில் இவருடைய ஒவ்வொரு டயலாக்கும், நடிப்பும் வேற லெவல்ல இருந்தது. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்து உள்ளார். இப்படி வெள்ளந்தியான அம்மா நடிகை ஜானகி சபேஸ்க்கு ஒரு மகள் உள்ளார். அவருடைய பெயர் தவானி. தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் எல்லோரும் கில்லி அம்மாவுக்கு இவ்வளவு அழகான மகளா!! என்று ஆச்சரியத்தில் உள்ளார்கள்.
அதுமட்டும் இல்லாமல் அந்த புகைப்படத்தை அதிகமாக ஷேர் செய்தும், லைக் செய்தும் வருகிறார்கள் நெட்டிசன்கள். சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட அம்மா கதாபாத்திரத்தைப் பற்றியும் நடிகை ஜானகி கூறியிருந்தார். அதில் அவர் கூறியது, படத்தில் தான் என்னைப் பேக்கு அம்மாவாக காண்பிக்கிறார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் அப்படி கிடையாது. 75% கலகலப்பாகவும், 25% கண்டிப்பாகவும் இருப்பேன். என் மகள் தவாணிக்கு 26 வயதாகிறது. அவர் பெங்களூரில் ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்கிறார். என் மகள் எனக்கு அட்வைஸ் செய்யும் அளவுக்கு வளர்ந்து உள்ளார். இதை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது என்றும் கூறி உள்ளார்.
இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் தற்போது ஸ்டோரி டெல்லர் வேலைகளையும் செய்து வருகிறார். அதாவது சமீப காலமாக இவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு கதை சொல்லும் வேலையை செய்து வருகிறாராம். அதோடு இவர் குழந்தைகளை சந்தித்து அவர்களுக்கு கதை கூறுவது, பாடல் பாடுவது போன்றவற்றில் அதிகம் ஈடுபட்டு வருகிறாராம்.‘தி ஜங்கிள் ஸ்டோரி டெல்லிங் ஃபெஸ்டிவல்’ என்னும் குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றையும் எழுதி எழுத்தாளராக அவதாரம் எடுத்து இருக்கிறார்.