நடிகர் தர்சன் பெயரில் மர்ம நபர்கள் பெண் ஒருவரிடம் பணம் மோசடி செய்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் தர்ஷன். இவர் ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயன் தம்பியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்று சொல்லலாம். அதற்கு பின்பு கனா படத்தில் ஹீரோவாக களம் இறங்கி இருந்தார்.
இந்த படத்தின் மூலம் தர்சனுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அதனை தொடர்ந்து தும்பா படத்திலும் இவர் நடித்திருந்தார். தற்போது அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த துணிவு படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தர்ஷன் நடத்தி இருந்தார். இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கியிருந்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த படம் வெளியாகி இருந்து.
இந்த படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லலாம். இதனை தொடர்ந்து சில படங்களில் தர்ஷன் கமிட் ஆகியிருக்கிறார். இதற்கிடையில் இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.இந்த நிலையில் தர்ஷனின் பெயரை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பணமோசடி செய்து ஒரு பெண்ணை ஏமாற்றி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் நடிகர் தர்ஷன் பெயரில் போலி ஐடியை உருவாக்கி மர்ம நபர் ஒருவர் பேசியிருக்கிறார். அந்த பெண்ணிடம் அவர் நன்றாக பழகி பேசி இருக்கிறார். அதன் பின் அந்த பெண்ணிடம் செல்போன் என்னையும் வாங்கி அவருடன் whatsapp மூலம் பேசி அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனைத்தும் பகிர்ந்து இருவரும் நெருக்கமாக பழகி இருக்கிறார்கள். ஆனால், அந்த நபர் அந்தப் பெண்ணுடைய புகைப்படங்களை தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் இதை வெளியிடாமல் இருக்க இரண்டு லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று அந்த பெண்ணிடம் கூறியிருக்கிறார். அந்த பெண்ணும் பயந்து பணம் கொடுத்து இருக்கிறார். ஆனால், தொடர்ந்து அந்த நபர் அந்த பெண்ணை மிரட்டி வந்ததால் அந்த பெண் போலீசில் புகார் அளித்திருக்கிறார். மேலும், இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி இருக்கிறது. பின் அந்த நபர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அலாவுதீன் , வாகித் என்பதும் தெரியவந்தது.
இருவருமே சகோதரர்கள். இந்த இருவரும் ஒரு ஐடி மூலம் அந்த பெண்ணுடன் பழகி வந்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் அந்த பெண்ணிடம் பணம் மோசடி செய்தது உண்மை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்திருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.