அயலான் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ரவிக்குமாருக்கு கிடைத்த குட் நியூஸ். அது என்ன தெரியுமா??

0
151
- Advertisement -

அயலான் பட இயக்குனர் சொல்லி இருக்கும் ஒரு குட் நியூஸ் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் ஆர் ரவிக்குமார். இவர் டைம் டிராவலை மையமாக வைத்து 2015 ஆம் ஆண்டு இயக்கத்தில் வெளிவந்த படம் இன்று நேற்று நாளை. இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ், ரவிசங்கர், ஜெயபிரகாஷ், அனுபமா குமார், முனீஸ் காந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதை அடுத்து இவர் சயின்ஸ் பிக்சன் பாணியில் ஏலியன் கான்செப்ட் வைத்து அயலான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

இயக்குனர் ஆர் ரவிக்குமார் திரைப்பயணம்:

இந்த படத்திற்கான வேலைகள் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், கொரோனா மற்றும் சில காரணங்களால் படத்தினுடைய வேலைகள் தொடர்ந்து நீண்டு கொண்டே சென்றது. பல போராட்டங்களுக்குப் பிறகு சமீபத்தில் தான் இந்த படம் வெளியாகி இருக்கிறது . இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் இவர்களுடன் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, பாலா சரவணன், பானுப்ரியா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

அயலான் படம்:

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்து இருக்கிறார். பல சிரமங்களுக்குப் பிறகு வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றது. மேலும், இந்த படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கிறது. வித்தியாசமான கதைகளத்துடன் இயக்குனர் இந்த படத்தை கொடுத்திருந்தாலும் எதிர்பார்த்து வெற்றி கிடைக்கவில்லை. இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

இயக்குனர் ஆர் ரவிக்குமார் சொன்ன நியூஸ்:

இதனை அடுத்து இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இயக்குனர் ஆர் ரவிக்குமார் சொல்லிருக்கும் குட் நியூஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ரவிக்குமார் அவர்கள் பிரியா கணேசன் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே நறுமுகை என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

ரவிக்குமார் பதிவு:

இந்த நிலையில் இவர்களுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. இந்த செய்தியை சோசியல் மீடியா பக்கத்தில் ரவிக்குமார் பகிர்ந்து இருக்கிறார். இதைப் பார்த்து ரசிகர்கள் பலருமே ரவிக்குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இதனை அடுத்து ரவிக்குமார், உங்கள் அன்பு வாழ்த்துக்களால் வளம் பெறுவான்” என்று நன்றி தெரிவித்திருக்கிறார்.

Advertisement