‘குறட்டையை வைத்து இப்படி ஒரு கதையா’ – ஜெய் பீம் மணிகண்டன் நடித்துள்ள ‘குட் நைட்’ எப்படி ?- முழு விமர்சனம் இதோ.

0
1426
Goodnight
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நாயகனாக திகழ்பவர் மணிகண்டன். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் குட் நைட். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம் ஆர் பி என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கும் குட் நைட் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் மிடில் கிளாஸ் குடும்ப பையன் மோகன் இருக்கிறார். இவருக்கு தூங்கும்போது குறட்டை வரும். இது நாளடைவில் அவருக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இந்த விடும் குறட்டையால் குடும்பம், நண்பர்கள், அலுவலகம் போன்ற பல இடங்களில் மோகன் அவமானப்படுகிறார். ஒரு கட்டத்தில் அவன் விடும் குறட்டையை காரணம் காட்டி காதலியும் அவரை விட்டு சென்று விடுகிறார். இதனால் மோகன் மனம் உடைந்து விரத்தியின் உச்சிக்கு செல்கிறார்.

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் தன்னந்தனியாகவே தன்னுடைய வாழ்க்கையை மோகன் நடத்திக் கொண்டு வருகிறார். அப்போதுதான் இவருக்கு அனு என்பவர் அறிமுகம் ஆகிறார். பின் நாளடைவில் இவர்களுடைய நட்பு காதலாக மாறுகிறது. இவர்களுடைய காதல் கல்யாணத்தில் முடிகிறது. ஆனால், மோகன் தன்னுடைய குறட்டை பிரச்சனையை அனுவிடம் மறைக்கிறார். பின் இரவு நேரத்தில் அவருடைய குறட்டை பிரச்சினை பூகம்பமாக வெடிக்கிறது.

அதன் பின்னர் என்ன ஆனது? மோகனின் குறட்டை பிரச்சனை தீர்வுக்கு வந்ததா? அனு அவரை விட்டு பிரிந்தாரா? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் மோகன் என்ற கதாபாத்திரத்தில் மிடில் கிளாஸ் பையனாக மணிகண்டன் நடித்திருக்கிறார். காமெடி, கோபம், விரக்தி, நடுத்தர குடும்பப் பையன் என அனைத்து உணர்வுகளையும் சரியாக காண்பித்து இருக்கிறார் மணிகண்டன். குறிப்பாக, காதல் காட்சிகள் குறட்டை பிரச்சினையை தீர்க்க மோகன் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

கதாநாயகியாக மீத்தா நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. மாமா கதாபாத்திரத்தில் ரமேஷ் திலக் நடித்திருக்கிறார். காமெடிகில் அவர் செய்யும் சேட்டைகள் அருமையாக இருந்தாலும் குடும்பத்தை கொண்டு செல்லும் விதம் பாராட்டுக்குரிய ஒன்று. இவர்களை தொடர்ந்து படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இயக்குனர் கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்திற்கு பாராட்டுகள்.

மேலும், இயக்குனர் கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்திருக்கிறார். அதோடு படத்தில் நடக்கும் ஒவ்வொரு காட்சிகளும் நம் வீட்டில் நடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் தான். ஆரம்பத்தில் தான் கதை மெதுவாக செல்வது போல் இருக்கிறது. இருந்தாலும், இரண்டாம் பாதியில் இயக்குனர் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். மொத்தத்தில் இந்த கோடைகால விடுமுறைக்கு குட் நைட் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிறை:

மணிகண்டனின் நடிப்பு சிறப்பு

பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்

பின்னணி இசையும் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்

இயக்குனரின் கதைக்களம்

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

ஆரம்பத்தில் மெதுவாக செல்கிறது

மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக குறைகள் எதுவும் இல்லை

மொத்தத்தில் குட் நைட் – மணிகண்டனுக்கு விடியலை கொடுக்கும்

Advertisement