2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்களின் பட்டியல்- விஜய்,அஜித் எத்தனாவது இடம் தெரியுமா?

0
308
kollywood
- Advertisement -

கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் விஜய் பிடித்திருக்கும் இடம் குறித்த விவரமும் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கிறது. இதனால் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய படம் வந்தாலே போதும் திரையரங்களில் திருவிழா போல ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

- Advertisement -

வாரிசு படம்:

தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

வாரிசு படம் பற்றிய தகவல்:

இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு வாரிசு என பெயர் இடப்பட்டு உள்ளது. தற்போது விஜய் அவர்கள் படத்தில் மும்முரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

ஆசிய பிரபலங்கள் பட்டியல்:

அதுமட்டுமில்லாமல் விஜய் பற்றி சின்ன செய்தி வந்தால் கூட ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். இந்தநிலையில் கூகுளில் 2022ல் அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்களின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் விஜய் 22வது இடத்தை பிடித்திருக்கிறார். இந்த பட்டியலில் பிடிஎஸ் பிரபலம் வி தான் முதல் இடத்தினைப் பிடித்து இருக்கிறார். சல்மான் கான் 11வது இடம், ஷாருக்கான் 12 ஆம் இடம் பிடித்திருக்கிறார்.

பிரபலங்கள் பிடித்து இருக்கும் இடம்:

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் 19 ஆவது இடம், விஜய் 22 வது இடத்தைப் பிடித்திருக்கிறார். நடிகைகளில் கத்ரினா கைப் -7ம் இடம், ஆலியா பட் -8ம் இடம், காஜல் அகர்வால்-15ம் இடம், சமந்தா -18ம் இடம், ரஷ்மிகா மந்தனா- 20ம் இடம் ஆகியோர் விஜய்யை முந்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த பட்டியலில் அஜித் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டாப் 100 இடங்களை பிடித்து இருக்கும் பிரபலங்களின் பட்டியல் சோசியல் மீடியாவில் பயங்கர டிரன்டிங் ஆகி வருகிறது.

Advertisement