இத்தனை வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் நடிக்க கூடாது, இத்தனை மணி நேரம் தான் நடிக்க வேண்டும் – பல கட்டுப்பாடுகளை விதித்த NCPCR

0
479
vikram
- Advertisement -

சினிமாவில் நடிக்க வைக்கும் குழந்தை நடிகர்களுக்கான வரைவு வழிகாட்டுதலை தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டிருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக பலர் நடித்து வருகிறார்கள். பிறந்த குழந்தை முதல் பள்ளி செல்லும் பருவம் வரை என குழந்தைகள் படங்களில் நடித்து வருகிறார்கள். குழந்தை நட்சத்திரம் சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை இருக்கிறது.

-விளம்பரம்-

உதாரணத்திற்கு பேபி ஷாலினி முதல் தற்போது இருக்கும் மீனாவின் மகள் நைனிகா என பல பேர் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். மேலும், குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் தற்போது சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். படங்களில் மட்டும் இல்லாமல் நிகழ்ச்சிகள், சீரியல்கள் என அனைத்திலுமே குழந்தைகள் நடிக்கிறார்கள்.

இதையும் பாருங்க : 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்களின் பட்டியல்- விஜய்,அஜித் எத்தனாவது இடம் தெரியுமா?

- Advertisement -

இதனால் குழந்தையின் பல திறமைகள் வெளியுலகிற்கு கொண்டு வரப்படுகிறது. இது ஒரு பக்கம் வரவேற்கப்பட்டாலும் சில சமயங்களில் இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் சினிமாவில் நடிகர்களாக குழந்தைகளை நடிக்க வைப்பதற்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அதில் அவர்கள் கூறியிருப்பது,

-விளம்பரம்-

குழந்தைகளை நடிக்க வைக்க அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் படத்தயாரிப்பாளர்கள் அனுமதி பெறவேண்டும்.

படப்பிடிப்பு தளத்தை ஆய்வு செய்த பிறகு அனுமதி கடிதம் மாவட்ட ஆட்சியர் வழங்குவார்.

ஆறு மாத காலத்திற்கு மட்டுமே அந்த கடிதம் செல்லுபடியாகும்.

மூன்று மாத வயதிற்க்கு கீழ் உள்ள குழந்தைகளை நடிக்க வைக்கக்கூடாது.

கேலிக்கு ஆளாகும் கதாபாத்திரத்தில் குழந்தைகள் நடிக்காமல் இருப்பது தயாரிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

6 மணி நேரத்திற்கு மேல் குழந்தைகளை நடிக்க வைக்கக்கூடாது.

மூணு மணி நேரங்களுக்கு ஒரு முறை குழந்தைகளுக்கு இடைவேளை விட வேண்டும்.

மேலும், இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை குழந்தைகளை நடிக்க வைக்கக் கூடாது.

மது அருந்துதல், புகை பிடித்தல் தொடர்பான காட்சிகளில் குழந்தைகளை காட்சிப் படுத்த கூடாது என்று கூறி இருக்கிறார்கள்.

இப்படி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது சோஷியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. இதற்கு சினிமா தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement