இயக்குனரான கௌதம் மேனன் தமிழில் இதுவரை கமல், அஜித், சிம்பு போன்ற பல முன்னணி ஹீரோக்களை வைத்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இறுதியாக இவரது இயக்கத்தில் வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம் சிம்புவிற்கு பெரும் திருப்பு முனை படமாக அமைந்தது.
தற்போது தனுஷை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்ட , விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் போன்ற படங்களை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களையும் வேறு ஒரு ஒரு சில தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்து வருகிறார். ஆனால், இந்த இரண்டு படங்களும் பல வருடங்களாக தாமதமாகி வருகிறது.
இதையும் படியுங்க : ட்விட்டரில் பயங்கர கேலிக்கு உண்டான கௌதம் மேனன்.! காரணம் இதான்.!
இந்த இரண்டு படத்தை தயாரிக்க கௌதம் மேனன் வாங்கிய கடன் மட்டும் தற்போது வட்டியுடன் சேர்த்து 150 கோடிக்கு மேல் ஆகியுள்ளதாம். மேலும், என்னை நோக்கி பாயும் படத்திற்காக தனுஷுக்கு மட்டும் 1 கோடியே 70 லட்சம் ருபாய் பாக்கி பாக்கி வைத்திருக்கிறாராம் கௌதம் மேனன்.
பண கஷ்டத்தை எப்படியாவது சமாளிக்கவே வெப் தொடர்களை இயக்கம் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் கௌதம் மேனன். இயக்கத்தை விட்டு விட்டு பட தயாரிப்பில் இறங்கியதால் தான் கௌதம் மேனனுக்கு இவ்வளவு பண பிரச்சனை என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிகின்றன.