திருமாவளனுக்கு வழங்கப்பட்ட தத்துவப் பேரறிஞர் விருது – கடுமையாக விமர்சித்து மோகன் ஜி போட்ட பதிவு.

0
3347
Mohang
- Advertisement -

விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்து இயக்குனர் மோகன் ஜி பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் அவர்கள் இயக்குனராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இருந்தாலும், இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படத்திலும் இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை.

- Advertisement -

மோகன் ஜி திரைப்பயணம்:

இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. மேலும், இயக்குனர் மோகன் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்டை வைத்து இரண்டு படங்களை இயக்கி இருந்தார். இதன் மூலம் இவருக்கு அஜித்தின் பழக்கமும் ஏற்பட்டது. அதோடு இவர் தீவிர தல ரசிகர் என்பது பலருக்கும் தெரியும். இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பகாசூரன் படம்:

இதனை தொடர்ந்து மோகன் அவர்கள் செல்வராகவனை வைத்து பகாசூரன் படத்தை இயக்கி இருந்தார். மோகன் ஜியின் முந்தைய திரைப்படம் போல இந்த திரைப்படமும் சமூக அக்கறை போல ஒரு படமாகவே எடுக்க முயற்சி செய்து இருந்தார் மோகன். மேலும், இந்த படத்தின் சமூக வலைதளத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை, பாலியல் தொழிலில் பெண்கள் எப்படி சிக்குகின்றனர் போன்ற விஷயங்களை பேசி இருந்தார் மோகன்.

-விளம்பரம்-

சோசியல் மீடியாவில் மோகன்:

மோகன் இயக்கும் படம்: இந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதனை தொடர்ந்து மோகன் மீண்டும் ரிச்சர்டை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இப்படி இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். இவர் சமூகப் பிரச்சனை, அரசியல் குறித்து கருத்துக்களை பதிவிட்டு ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் திருமாவளவனை விமர்சித்து போட்ட டீவ்ட் தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுகிறது.

மோகன் ஜி பதிவு:

அதாவது, சமீபத்தில் தமிழ்நாடு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி எஸ்சி/ எஸ்டி ஆசிரியர் சங்கம் பிரிவில் விசிக தலைவர் தொல் திருமாவளவனுக்கு தத்துவப் பேரறிஞர் விருது வழங்கப்பட்டது. இதை விமர்சித்து இயக்குனர் மோகன் ஜி அவர்கள், எனக்கு புரியல. இந்த ஆசிரியர்கள் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லித் தருவாங்களா? இல்ல ஜாதிகள் உள்ளதடி பாப்பா என்று சொல்லித் தருவார்களா? என்று பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement