இத்தகைய நடவடிக்கைகளை ஆளுநர் ஏற்க மறுப்பது அதிகார ஆணவத்தின் வெளிப்பாடு- CPI முத்தரசன்.

0
892
- Advertisement -

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை பரிந்துரைக்க தமிழக அரசு அளித்த தீர்மானத்தை ஆளுநர் ரவி அவர்கள் அதை திருப்பி அனுப்பியது குறித்து ஆளுநரை விமர்சித்து பேசினார் முத்தரசன். அதில் அவர் நியமனம் தொடர்பாக வெளிபடையாக விளம்பரம் படுத்தப்பட்டதா என்ற கேள்வியும் அவர் எழுப்பியுள்ளார். தமிழக அரசின் பணிக்களுக்கான பணியாளர்களை தேர்வு செய்யும் தலைவர் பதவிக்கு முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபுவை நியமனம் செய்தது.

-விளம்பரம்-

அதே போல் உறுப்பினர்களின் தொடர்பாகவும் பரிந்துரை செய்யப்பட்டது. அதற்க்கான கோப்புகள் ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டுளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இதனை ஆளுநர் திருப்பி அனுப்பி வைத்தார். இந்த செயல்பாடுகள் குறித்தும் ஆளுநர் ரவி குறித்தும் முத்தரசன் பேசியுள்ளார்.

- Advertisement -

முத்தரசன் கூறியது:   

மக்கள் தேர்வு செய்து அமைத்துள்ள மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் ரவி அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் எனவும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தமிழக அரசு அனுப்பி வைத்த அரசு பணியாளர் தேர்வு மற்றும் அதில் உறுப்பினர்கள்  தொடர்பான கோப்புகளை நிறுத்தி வைத்துள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அவர்களது பெற்றோர்களையும் அழைத்து பேசி இருக்கிறார். ஆளுநர் பொறுப்புக்கு ஆளுநர் ரவி  தகுதியற்றவர் என்று ஓர் ஆண்டுக்கு முன்பு குடியரசுத் தலைவரிடம் முறையிட்டோம் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்கப்படவில்லை. 

அரசியலமைப்புச் சட்டத்தின் அத்துமீறல் நடக்காமல் கண்காணிக்கும் கடமையும் பொறுப்பும் குடியரசுத் தலைவர் அதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். நாட்டின் சுதந்திர தின விழாவில் 55 ஆயிரம் பணியாளர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். அதனை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும்  உறுப்பினர்களை தேர்வு செய்ய கோப்புகளை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த ஆளுநர் ரவி மீண்டும் திருப்பி அனுப்பி உள்ளார்.

-விளம்பரம்-

இந்த செயல் தமிழக உரிமைகளுக்கு எதிராக இருக்கிறது. இது அதிகார ஆணவத்தின் வெளிப்பாடு. இது தமிழ்நாட்டு மக்களே உரிமைகளுக்கு எதிரானது. ஆளுநர் ரவி மாநில அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் மன்மத்துடனும் செயல்பட்டு வருகிறார். அரசியலமைப்புச் சட்டம் மாநில அரசின் அதிகாரங்களை வழங்கி உள்ள குடிமக்களின் அரசியல் உரிமைகளை பறிக்கப்படுவது தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை அவர் உணர வேண்டும்.

ஆளுநர் ரவி அவர் செல்லும் இடங்களில் அவர் ஜனநாயகத்தின் அவர்களை காட்டுவது உள்ளிட்ட ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்துவார்கள் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்து கொள்வதாக அவர் கூறினார்.

Advertisement