உங்களால தான் சமந்தாவுக்கு இப்படி ஆச்சி – விஜய் தேவர்கொண்டா மீது பகிரங்கமாக குற்றம் சாட்டிய பயில்வான்.

0
1131
Vijay
- Advertisement -

சமந்தாவிற்கு நோய் வர காரணமே நீங்கதானா? என்று விஜய் தேவர்கொண்டாவிடம் பயில்வான் ரங்கநாதன்
கேட்டிருக்கும் கேள்வி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகராக விஜய் தேவர்கொண்டா திகழ்கிறார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஹிட் அடித்து இருக்கிறது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் ‘liger’. இந்த படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாதன் இயக்கி இருந்தார். இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் Pan இந்தியா படமாக வெளியாகி இருந்தது. இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படம் வெளியாகி மிக பெரிய அளவில் தோல்வி அடைந்து இருந்தது. இது குறித்து பலரும் விமர்சித்து இருந்தார்கள். இதனை அடுத்து தற்போது விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் குஷி.
இந்த படத்தை இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கி இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் நடிகை சமந்தா, முரளி சர்மா, சச்சின் கதேர், சரண்யா பொன்வண்ணன், லட்சுமி என பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்து இருக்கிறார்.

- Advertisement -

பிரஸ் மீட் :

இப்படம் செப்டம்பர் 1 ஆம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சமந்தா கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தார். அதற்குப் பிறகு சமந்தா தன்னுடைய மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு கிளம்பிவிட்டார். தற்போது இந்த படத்திற்கான ப்ரமோசன் பணிகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. இதில் பங்கேற்றப்பட்ட செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு படக்குழு பதில் அளித்து இருக்கிறார்கள்.

பயில்வான் ரங்கநாதன் கேட்ட கேள்வி:

அப்போது விஜய் தேவர் கொண்டாவிடம் வழக்கம்போல் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய சர்ச்சையான கேள்வியை கேட்டிருக்கிறார். அதாவது சமந்தா இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு நோய்வாய்ப்பட்டாரா? இல்லை பின்பா? என்று கேட்டிருந்தார். அதற்கு விஜய் தேவர் கொண்டா, சமந்தா இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே 60% படப்பிடிப்பை நடத்திவிட்டோம். பின் அவர் இந்த நோயில் பாதிக்கப்பட்ட உடன் சிகிச்சை எடுத்து குணமடைந்த நிலையில் தான் மீண்டும் 40 சதவீத படப்பிடிப்பு நடத்தினோம். அவர் மீண்டும் நன்றாக திரும்பி வருவார் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

வைரலாகும் வீடியோ:

அதற்கு பின் விஜய் தேவர் கொண்டாவை வம்பிழுக்க பயில்வான் ரங்கநாதன், சமந்தாவிற்கு இந்த நோய் வருவதற்கு காரணமே நீங்கதானா? என்று கேட்டிருக்கிறார். இதைக் கேட்டு மற்ற பத்திரிகையாளருக்கும் சிரித்தார்கள். ஆனால், விஜய் தேவர்க்கொண்டாவுக்கு ரங்கநாதன் சொன்னது புரியவில்லை. அதற்குள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த தொகுப்பாளர் இந்த நிகழ்ச்சியை முடிந்து விட்டது என்று விஜய் தேவர் கொண்டாவை அழைத்து சென்றிருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமந்தா நோய் குறித்த தகவல்:

கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே. இதற்காக இவர் தீவிரமாக சிகிச்சையும் எடுத்து வருகிறார். ஆனால், அந்த நோயிலிருந்து சமந்தா பூரணமாக குணமடையவில்லை. தற்போது அந்த நோயின் தாக்கம் அதிகமாகி இருக்கிறது. இதனால் நோயின் காரணமாக நடிக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது இவர் தனக்கு பிடித்த மற்றும் மனதிற்கு நிம்மதியான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement