விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்திற்கு அரசியல் கட்சியின் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. படத்தில் சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டும் என்று பல்வேறு அமைச்சர்களும் சர்காருக்கு போர் கொடி துக்கியுள்ள நிலையில் அம்மா கட்சியின் டிடிவி தினகரன் புதிய சர்ச்சை ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.
சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது. படத்தில் அரசின் விலையில்லா பொருட்கள் எரிப்பது போல சில காட்சிகள் உள்ளது அந்த காட்சிகளை அவர்களாகவே நீக்கிவிட்டால் நல்லது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரித்திருந்தார்.
இதை தொடர்ந்து பல்வேறு அ தி மு க அமைச்சர்களும், கட்சி பிரமுகர்களும் சர்கார் படத்தை எதிர்த்து வருகின்றனர்.மேலும், இந்த திரைப்படத்தை திரையிட கூடாது என்று பல்வேறு பகுதிகளில் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இதுபோக சர்கார் படத்தில் வரலக்ஷ்மி கதாபாத்திரத்திற்கு ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமாளிவள்ளி என்ற பெயரை வைத்துள்ளார்கள் என்றும், இது ஜெயலலிதாவை அவமிப்பதாக உள்ளது என்றும் ஒரு பெரும் சர்ச்சையும் அ தி மு க சார்பில் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற திரு டிடிவி தினகரன் பேசியபோது, சர்கார் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கோமளவல்லி என்ற பெயர் ஜெயலலிதாவின் பெயர் எல்லை என்று புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், கோமாளிவள்ளி என்பது ஜெயலலிதாவின் பெயர் கிடையாது, சர்ச்சையா ஏற்படுத்தவேண்டுமென்றே அதிமுகவினர் வேண்டுமென்றே செய்கின்றனர். அதே போல சர்கார் படகுழுவும் வியாபார நோக்கத்தில் தான் படமெடுத்துள்ளது. அதிமுக அளித்த விலையில்லா பொருட்களை எரிப்பது போல சில காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
ஆனால், திமுகவினர் அளித்த காலைஞர் தொலைக்காட்சியை ஏன் எரிப்பது போல காட்சி அமைக்கபடவில்லை. திரைப்படம் என்பது நடுநிலையாக இருக்க வேண்டும் ஆனால், சர்கார் படம் அப்படி இல்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி ஒரு தைரியம் யாருக்காவது வந்திருக்குமா என்று கூறியுள்ளார்.