அரேஞ்சுடு மேரேஜில் கட்டாயக் காதல்தான் இருக்கும். ஆனால், லவ் மேரேஜில் – உடுமலைப்பேட்டை கௌசல்யா.

0
816
- Advertisement -

இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஷங்கருக்கும், கௌசல்யாவிற்கும் காதல் ஏற்பட்டு இருந்தது. ஆனால், இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சார்ந்தவர்கள் என்பதால் கவுசல்யாவின் குடும்பத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். பின் இருவருமே 2015 ஆம் ஆண்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கௌசல்யாவின் பெற்றோர்கள் கூலிப்படையின் மூலம் சங்கரையும், கௌசல்யாவையும் வெட்டி சாய்த்தனர்.

-விளம்பரம்-

இதில் ஷங்கர் உயிர் இழந்தார். கௌசல்யா படு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். இந்த ஆணவ படுகொலை தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் உயிர் தப்பிய கௌசல்யா சமீபத்தில் சக்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் சுயமரியாதைக்கு முறைப்படி நடந்தது. சக்தி பெண்கள் விவகாரத்தில் மோசமானவர் என்ற சர்ச்சை எழுந்தாலும் இருவரும் நன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

- Advertisement -

கௌசல்யா பேட்டி :

இந்த நிலையில் தான் கௌசல்யாவிடம் பிரபல ஊடகம் ஓன்று பேட்டி எடுத்திருந்தது. அந்த பேட்டியில் அவர் காதல் பற்றி பேசியிருந்தார். கௌசல்யா கூறுகையில் காதல் என்பது இயற்கையானது. மக்கள் மக்களின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஓன்று. பெற்றோர்கள் ஏற்படாது செய்யும் திருமணங்களுக்கு, காதலித்து திருமணம் செய்பவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. காதல் திருமணம் என்றால் நான் வாடா போடா என்று பேசலாம். சுதந்திரமான போக்கு இருக்கும்.

கட்டாய காதல் :

அதோடு சாதி மதம் என்ற பாகுபாடு இருக்காது. காதலியை காதலனுக்கு தெரிந்திருக்கும். ஆனால் பெற்றோர்கள் செய்து வைக்கும் திருமணம் அப்படி கிடையாது. அதில் அதிக பிரச்சனைகள் ஏற்படும். காதல் ஏற்பட்டாலும் அது கட்டாய காதலாக்கத்தான் இருக்கும். அதனால் காதலித்து திருமணம் செய்வதே நல்லது. அதே நேரத்தில் காதல் திருமணத்தில் சுதந்திரம் என்பது இருக்க வேண்டும். என்னுடைய கணவர் சக்தியும் எம் சி ஏ படித்திருந்தாலும் காலை மீதான ஆர்வத்தால் பறையிசையில் சாதித்துக்கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

சங்கர் பெயர் பற்றி கௌசல்யா :

பலர் முற்போக்கு தனமாக பேசுவார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் பெண்களை வீட்டில் அடக்கி அடிமையாக வைத்திருப்பார்கள். ஆனால் என்னுடைய கணவர் சக்தி அப்படி கிடையாது.என்னை சுதந்திரமாக இருக்க வைத்துள்ளார். என்னுடைய பெயரில் ஏன் இனனும் சங்கர் என்ற பெயரை வைத்திருக்கிறீகள் என பலர் கேட்டுள்ளனர். ஆனால் சக்தி அதை பற்றி என்னிடம் கேட்டது கிடையாது. அதனை சக்தி நீக்கவும் கூறியதில்லை.

பெரியார் சொல்வது இதுதான் :

சங்கர் என்ற பெயர் என் வாழக்கையில் பிரிக்கவே முடியாது. நான் என்னுடைய வாழக்கையில் உயிர்ப்போடு இருப்பதற்கு காரணமே சங்கர் தான். அதனை என்னுடைய கணவர் புரிந்துகொண்டு என்னை நல்லபடியாக பார்த்துக்கொள்கிறார். காதல் என்பதற்கு அறிவுப்பொருத்தம் அறிமுகப்பொருத்தம் இருக்க வேண்டும். காதல் என்பது சாதியை ஒழிக்கும் என பெரியார் சொல்வது இதைத்தான் என அந்த பேட்டியில் கூறினார் கௌசல்யா சங்கர்.

Advertisement