சாய் பல்லவி மீது தாறுமாறான Crush, போன் நம்பர் கூட இருக்கு ஆனா பேச தைரியம் இல்ல – இளம் நடிகர் ஏக்கம்

0
2424
Saipallavi
- Advertisement -

நடிகை சாய் பல்லவி மீது எனக்கு கிரஸ் என்று பாலிவுட் நடிகர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் கோயம்பத்தூரை பூர்விகமாக கொண்டவர். இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று இருந்தார்.

-விளம்பரம்-
saipallavi

அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. பின் 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளி வந்த “பிரேமம்” என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சாய் பல்லவி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். இப்போது கூட இவரை அதிகம் மலர் டீச்சர் என்று தான் ரசிகர்கள் கூப்பிடுகிறார்கள். பின்னர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

சாய்பல்லவி திரைப்பயணம்:

கடந்த ஆண்டு சாய்பல்லவி தெலுங்கில் ராணாவுடன் இணைந்து ‘விரத பர்வம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக சாய்பல்லவி திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சாய்பல்லவியின் துணிச்சலான நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்தார்கள். இதனை அடுத்து சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கார்கி.

கார்கி படம்:

இந்த படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சாய் பல்லவி உடன் காளி வெங்கட், ஆர்.எஸ். சிவாஜி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பிரபலங்கள் பலரும் சாய்பல்லவி நடிப்பை பாராட்டி இருந்தார்கள். தற்போது இவர் சிவகார்த்திகேயனின் 21 வது படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

சாய்பல்லவி நடிக்கும் படம்:

இதனை அடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா 2 படத்தில் சாய் பல்லவி அவர்கள் பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சாய்பல்லவி மீது கிரஸ் இருப்பதாக பாலிவுட் நடிகர் கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, பாலிவுட்டில் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் குல்ஷன் தேவய்யா. இவர் சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார்.

குல்ஷன் தேவய்யா அளித்த பேட்டி:

அதில் அவர் சாய்பல்லவி குறித்து கூறியிருந்தது, எனக்கு சாய் பல்லவி மீது கிரஷ் இருக்கிறது. அவரின் போன் நம்பர் என்னிடம் இருக்கிறது. ஆனால், அவரை தொடர்பு கொண்டு பேசுவதற்கு தைரியம் என்னிடம் இல்லை. அவர் ஒரு அற்புதமான நடிகை, நடன கலைஞர். இது ஒரு கிரஷ் மட்டுமே. அதற்கு மேல் எதுவும் இல்லை. என்னுடைய வாழ்க்கையில் அவருடன் ஒரு படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால் நான் கண்டிப்பாக சந்தோஷமாக நடிப்பேன். ஒரு விஷயம் நடக்கவிருந்தால் அது நடக்கும். அது நடக்கவில்லை என்றால் அது நடக்காது. ஆனால், ஒரு நல்ல நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement