அஜித் படத்தில் இடம்பெற்ற 2 மாஸ் காட்சிகளை வெளியிட்ட காவல் துறையினர். எதுக்கு தெரியுமா?

0
1463
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித் குமார். ரசிகர்கள் அன்போடு ‘தல’ என்று அழைக்கப்படும் அஜித், 1993-ஆம் ஆண்டு வெளி வந்த ‘அமராவதி’ என்ற படத்தில் தான் முதன் முறையாக கதையின் நாயகனாக நடித்தார். அந்த படத்தினை இயக்குநர் செல்வா இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ‘பவித்ரா, ஆசை, வான்மதி, கல்லூரி வாசல், காதல் கோட்டை, உல்லாசம், காதல் மன்னன், வாலி, அமர்க்களம், சிட்டிசன்’ போன்ற பல படங்களில் நடித்தார் ‘தல’ அஜித்.

-விளம்பரம்-

‘தல’ அஜித்துக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அஜித் நடிப்பில் வெளி வந்த திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதையும் பாருங்க : “தம்பி மரணம்” சொந்த ஊருக்கு 1280 கி.மீட்டர் சைக்கிளில் செல்லும் அண்ணன். நெகிழவைக்கும் சம்பவம்.

- Advertisement -

நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் ‘தல’ அஜித்துடன் இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணி அமைத்திருக்கும் படம் தான் ‘வலிமை’. இந்த படத்தில் அஜித்துக்கு செம மாஸான போலீஸ் ரோல் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, அஜித் சில படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இந்த படம் அவருக்கு ரொம்பவும் ஒரு ஸ்பெஷலான படமாக இருக்குமாம்.

இதையும் பாருங்க : ப்ப்பா, இந்த வயசுலையும் இப்படியெல்லாம் போஸ் குடுக்குறீங்களே. நடிகையை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

‘தல’ அஜித்தின் திரை உலக வாழ்வில் ‘வலிமை’ திரைப்படம் அவருக்கு 60-வது படமாம். பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய ‘மங்காத்தா’ அஜித்தின் 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘வலிமை’ படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரித்து கொண்டிருக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இது அதிக பொருட்செலவில் தயாராகி கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேனி மாவட்ட காவல் துறையினர் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “கொஞ்ச நாளைக்கு எல்லோரும் அவங்கவங்க வீட்டிலேயே இருங்க.. பயந்துட்டு இல்ல..! பாதுகாப்பாக இருக்க..!” என்று ஸ்டேட்டஸ் போட்டு ஒரு வீடியோ பதிவையும் ஷேர் செய்திருக்கிறார்கள். அந்த வீடியோ பதிவில் ‘தல’ அஜித், அவரின் ‘ஜனா’ படத்தில் இதே வசனம் பேசியிருக்கும் வீடியோவையும், ‘மங்காத்தா’ படத்தில் அஜித் வீட்டில் இருப்பது போன்ற மாண்டேஜ் வீடியோவையும் இணைத்து எடிட் செய்திருக்கிறார்கள். இப்போது இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Advertisement