குழந்தைகளின் கல்விக்காக ஜி வி பிரகாஷ் சொந்த செலவில் செய்த உதவி..!குவியும் பாராட்டு..!

0
511
- Advertisement -

சமீபகாலமாக 890 அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளன. ஏனெனில் அங்கு 50-க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர். நகரத்தில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. இதை மாற்றஜி வி பிரகாஷ் முடிந்த ஒரு சிறு முயற்சியாக சென்னையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி, யு.கே.ஜி சொல்லித் தரும் ஆசிரியர்களின் சம்பளத்தை  ஏற்றிருந்தார்.

-விளம்பரம்-

இந்நிலையில் அவர் தற்போது விழுப்புரம் மரக்காணத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியரை 3 ஆண்டுகளுக்கு தத்தெடுத்துள்ளார். 3 ஆண்டுகளுக்கு அந்த ஆசிரியரின் சம்பளம் உள்பட அனைத்து செலவுகளையும் அவரே ஏற்றுள்ளார்.

இதுபோன்று போதுமான ஆசிரியர் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் கிராமப்புற பள்ளிகளின் ஆசிரியர்களை தத்தெடுத்தால் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத பற்றாக்குறை நீங்கி விடும். அதனால் இன்னும் பலர் முன்வந்து ஆசிரியர்களை தத்தெடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

- Advertisement -

தற்போது 
விழுப்புரம் மரக்காணத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு தனது சொந்த செலவில் இருந்து சம்பளத்தை வழங்கியுள்ளார் ஜி வி பிரகாஷ். ஜி பிரகாஷின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். 

Advertisement