கஞ்சா கருப்பு , கமல் கட்சியில் சேராமல் அ தி மு க அணியில் சேர்ந்தது இந்த அற்ப காரணத்திற்காக தானா?

0
730
- Advertisement -

சினிமா துறையில் பல படங்களில் நடித்து சம்பாதித்த பணத்தை தயாரிப்பில் இறங்கி சம்பாதித்த மொத்த பணத்தையும் இழந்த நடிகர்கள் வரிசையில் காமெடி நடிகர் கஞ்சா கருப்புவும் ஒருவர். ஆம், காமெடி நடிகரான கஞ்சா கருப்புவும் ” வேல்முருகன் போர்வெல்” என்று படத்தை தயாரித்து உள்ளார்.

-விளம்பரம்-

தான் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பணத்தையும் அந்த படத்தின் இயக்குனர் படத்தை இழுத்தடித்து காலி செய்து விட்டார் என்று ஒரு பேட்டியில் புலம்பியும் இருந்தார் கஞ்சா கருப்பு. அந்த படத்தை தயாரித்தற்கு பிறகு கடன் தொல்லைக்கு ஆளான கஞ்சா கருப்பு 
வளசரவாக்கத்தில் உள்ள வீட்டை அடமானம் வைத்து அந்தக் கடனை அடைத்தார். வீட்டிற்கு தவணைத் தொகை கட்ட முடியாமல் ஏலத்திற்கு வந்தது.

- Advertisement -

பின்னர் பட வாய்ப்புகள் மீண்டும் வர தொடங்க வந்த பணத்தில் தவணை முறையில் கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். அதன் பின்னர் மீண்டும் மார்க்கெட் இல்லாமல் போக என்ன கடனையும், கார் தவணையையும் எப்படி கட்டுவது என்று முழித்த கஞ்சா கருப்பிவிற்கு பின்னர் நண்பரிடம் உதவி கேட்க அவரோ அதிமுக கதியில் இணைந்தால் பணம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

பின்னர் 
எடப்பாடி தரப்பை நாடிய அவர்கள் தங்களுக்கு ஒரு லட்சம் கொடுத்தால் அதிமுகவில் இணைவதாகக் கேட்டிருக்கிறார்கள்.கடந்த வாரம் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரை நேரில் சந்தித்து அதிமுகவில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். இதற்காக அதிமுக தரப்பில் இருந்து 1 லட்ச ரூபாயும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதும் கஞ்சா கருப்பின் கடன் தீராத நிலையில் கட்சி முலயமாக எதாவது வேலை முடிய வென்றும் என்றால் நான் பார்த்துகிறேன் என்று உதார் விட்டு வருகிறாராம் கஞ்சா கருப்பு.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை கமலை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்துவிட்டு தற்போது அதிமுக கட்சியில் கஞ்சா கருப்பு பணத்திற்காக இணைந்துள்ளது பலரையும் வெறுப்படைய செய்துள்ளது.  

-விளம்பரம்-
Advertisement